நல்லாட்சி அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னால் நடைபெற்று வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
“எமக்கு மஹிந்தவின் அரசாங்கம் வேண்டும்” எமக்கு எமது தாய் மீண்டும் வேண்டும்” போன்ற கோஷங்களை எழுப்பியவண்ணம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டு எதிர்கட்சின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னாள் ஒன்றுகூடியுள்ளனர். அதேவேளை, கலகம் அடக்கும் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.