அ.அஹமட்-
இவ்வாட்சியை நிறுவுவதில் பொது பல சேனாவின் பங்களிப்பு அபரிதமானதெனலாம். அதிலும் குறிப்பாக முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் செயற்பாட்டை மிகவும் கன கச்சிதமாகசெய்திருந்தது.அதற்கான பலா பலன்களை தற்போது அவ் அமைப்பினர் பெற ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே மஹியங்கனை பொதுபல சேனா அமைப்பாளருக்கு சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியை ஜனாதிபதிவழங்கி வைத்தார்.
நான்கு பொலிஸ் குழுக்கள் போட்டு தேடிய ஞானசார தேரர் கடைசியில் ராஜமரியாதையுடன் பிணையில் சென்றார். அடுத்த கட்டமாக நேற்று பிற்பகல் மாத்தறை வேஹெஹேன பூர்வாராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிரம விமலஜோதி தேரருக்கு தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் என்றபதவிக்கான நியமன ஆவணத்தை வழங்கி வைத்துள்ளார். இவர் பொது பல சேனா அமைப்பின் ஸ்தாபக தலைவர்என்பது குறிப்பிடத்தக்கது. அளுத்கமை கலவரம் இடம்பெற்ற காலப்பகுதியில் எல்லாம் இவரே அவ் அமைப்பின்தலைவராக இருந்தார்.
பொது பல சேனா அமைப்பானது தோற்றுவிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுக்கு விரோதமானசெயற்பாட்டையே பிரதானமாக கொண்டுள்ளது.இதன் தலைவர் எப்படியானவராக இருப்பார் என்பதை யாரும்வார்த்தைகளால் எழுதி விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனலாம்.
அந் நிகழ்வில் குறித்த தேரரை ஜனாதிபதி மைத்திரி மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார். இவரை ஒழுக்கமிக்க பௌத்தமதத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒருவராகவும் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரியும் முஸ்லிம்களுக்கு எதிரானசிந்தனையை கொண்டிருப்பதால் பொது பல சேனாவின் செயற்பாடுகள் அனைத்தும் பௌத்த மதத்தை பாதுகாக்கும்செயற்பாடுகளாகவே தெரியும். அதன் முன்னாள் தலைவர் பௌத்த மதத்தை பாதுகாக்கும் செயற்பாட்டாளராகவும்தெரிவார்.
இவ்வாறான ஒருவருக்கு இந்த இடம் வழங்கப்பட்டுள்ளமையானது ஆபத்தின் அறிகுறியாகும். இதனை இவ்வாட்சிக்குபொதுபல சேனா அமைப்பு செய்த உதவிக்கான பரிகாரமாகவும் நோக்கலாம். இன்றைய ஆட்சியில் பொதுபல சேனவின்சிந்தனைகள் பல அரச அங்கீகாரத்தோடு இடம்பெறுவதோடு மிகவும் நுணுக்கமான முறையில் முஸ்லிம்களைஎதிர்கொள்ள முனைகிறார்களா என்ற அச்சமும் எழுகிறது.