'பசுமை பூமி ' புதிய கிராமம் மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வு..!

'பசுமை பூமி ' புதிய கிராமங்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதிஒதுக்கீட்டில் மாத்தறை மாவட்டம் ஹுலந்தாவ தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 தனி வீடுகளை கொண்ட புதிய கிராமம் மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வு 18-08-2017 அன்று இடம்பெறவுள்ளது. 

இவ்விசேட நிகழ்வானது பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்; பழனி திகாம்பரம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாத்தறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான கௌரவ புத்திக பத்திரன, விசேட அதிதிகள் மற்றும் பிரதேச மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -