அஸ்ஸலாமு அலைக்கும்...!
சாய்ந்த மருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்துக்கான கோரிக்கை உங்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு முயற்சிக்கும் , படுத்தப் போவதாய்,படுத்திக் கொண்டிருப்பதாய்,படுத்தியதாய்ச் சொல்லிக் கொள்கின்ற ,பிரதிநிதிகளால் சூடாகப் பேசிக் கொண்டிருக்கின்ற இக்காலப் பகுதியில்....
உங்களோடு எனது சில அவதானக் குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
உங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய கேட் முதலியார் எம் எஸ் காரியப்பர் அவர்களோ,எம் சி அஹ்மது அவர்களோ ஏ ஆர் எம் மன்சூர் அவர்களோ எம் எச் எம் அஷ்ரப் அவர்களோ இதற்க்கு முதல் இந்தக் கோரிக்கையினைப் பற்றி பேசவில்லை.
அவர்கள் பேசியிருந்தாலும் அதில் அர்த்தம் இருந்திருக்கும்.ஏனென்றால் அதன் நோக்கம் பரந்துப்பட்டிருக்கக் கூடும்.அவர்கள் எல்லோருமே மிகச் சிறந்த நமது தலைவர்கள்.
இன்று இவர்களில் ஒருவர் கூட உயிரோடு இல்லை.ஆனால் அவர்கள் வாழ்ந்து மறைந்த இந்த மாநிலமும் அதன் மக்களும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்...
இன்னும் வாழ்வார்கள்...இன்ஸா அல்லாஹ்...!
காலாதி காலமாக கல்முனை மாநகரம் இலங்கை முஸ்லிம்களின் அடையாளமாக இருந்து வருகிறது.
மட்டக்களப்பான் எனும் அடையாளத்துக்குள் புதைந்து அழிந்துவிடாமல் கிழக்கு முஸ்லிம்களுக்கு அடையாளம் தந்து கொண்டிருப்பது இந்த கல்முனை எனும் மாநகரம்.
தென்கிழக்கின் முக வெற்றிலையைத் துண்டாடும் அற்பமான சிந்தனை மிக தீவிரமாக அண்மைக்காலமாகவே உருவெடுத்ததை நானறிவேன்.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஏன் தேவைப்பட்டது என்பதை எண்ணிப் பாருங்கள்.
அதன்மூலம் சாய்ந்த மருது மக்கள் அடைய போகும் அதி உச்ச நன்மையினை எண்ணிப் பாருங்கள்.
அதிகார போட்டியினதும் வறட்டு கௌரவத்தினதும் வெளிப்பாடே இந்த தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் இன்று முற்று முழுதாகக் கபளீகரம் செய்யப் பட்டுவிட்டது.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தேசிய அடையாள அரசியலின் இறுதி அழிவுதான் கல்முனையின் இந்த உடைவு என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்குரிய பிரத்தியேகமான நடவடிக்கைகள் தவிர ........
வேறு எதனை இந்தப் பிரிப்பின் மூலமாக அடைந்து கொள்ள நினைக்கின்றிர்கள்...?
கல்முனை நகரத்தின் விஸ்தரிப்பானது கல்முனைக்குடி நகர் நோக்கி அன்றி வடதிசை நோக்கி நகரும் நிலையில் ....
நகரின் வர்த்தக விஸ்தரிப்பும் அதே திசை நோக்கும் நிலையில்..
கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டு வரும் மருதமுனையின் சமூக நிலைப்படும் இப்படி ஒரு பிரிவினைக்கான முனைப்பைக் காட்டினால்.....?
அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லீம் பிரதிநித்தித்துவங்கள் பெறும் காட்சி இதுதான் கடைசி என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...!
அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்வோம் என்று கூறுவது வார்த்தைக்கு மட்டுமே அழகு.நடைமுறையில் இதன் பிரதிபலிப்பு மிக மோசமானதாக இருக்கும்.
கல்முனை மாநகரம் சாதிப்பதற்கு நிறையவே இருக்கின்றது.இதுவல்ல சாதனை.
சிராஸ் மீராசாஹிபும் ஜெமீலும் ஹரீஸும் ஜவாதும் இன்னும் இன்றிருக்கின்ற யாரும் இல்லா ஒரு நாள் வரும்...
அப்போது உங்கள் இந்த பிரிப்புச் சாதனை ஒரு சோதனையாகவே இருக்கும்.
தென்கிழக்கின் தலைநகரமான கல்முனை அந்தத் தகுதியை விரைவில் இழக்கும்.
சம்மாந்துறை.