மகிந்த குடும்பத்தினர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர்களான யோஷித்த, ரோஹித்த ராஜபக்ச ஆகியோர் மீது இன்று முதல் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதற்கமைய சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 

சீனாவில் இருந்து விண்­ணுக்கு ஏவப்­பட்­ட­தாக கூறப்­படும் சுப்ரிம் செட் 1 எனும் செயற்கைக் கோள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புபட்ட நிதி விவகாரங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளவே ரோஹித்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபகஷவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிர­பல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவ­கா­ரத்தில், ஷிரந்தி ராஜ­ப­க்ஷவின் பாது­காப்பு வீரர்கள் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் ஜீப் வண்­டி­யொன்று தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும், அந்த ஜீப் வண்டி செஞ்­சி­லுவை சங்­கத்தால் சிரி­லிய சவிய அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டது எனவும், அந்த ஜீப் வண்டி வஸீமின் கொலைக்கு பின்னர் காரணம் இல்­லாமல் கறுப்பு நிற­மாக நிற­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­படும் நிலை­யி­லேயே ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­வையும் யோஷித்த ராஜ­ப­க்ஷ­வையும் விசா­ரணை செய்ய குற்றப் புல­னா­யவுப் பிரிவு தீர்­மா­னித்­துள்­ளது. 

டப்­ளியூ. பீ.கே.ஏ.0642 எனும் குறித்த ஜீப் வண்டி தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்று இடம்­பெறும் நிலை­யி­லேயே அவர்கள் இரு­வ­ரி­டமும் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்ள தீர்­மா­னித்து பொலிஸார் இந்த விசா­ர­ணை­களை நடாத்துகின்றனர். 

இதேவேளை, நாளை இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -