அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அப்பாடாசாலையின் பழைய மாணவர்களைக் கொண்ட AIM அமைப்பினரால் இலவச மருத்துவ முகாம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி, நாச்சிய தீவு பெரிய பள்ளிவாயளில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, பெரும்பான்மை மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் நாச்சியார் தீவு பகுதியில், இம்மருத்துவ முகாம் நடாத்தப்படுவதானது சிறந்த ஒரு முன்மாதிரியாகவும் கருதப்படுகிறது.
அத்தோடு இம் மருத்துவ முகாமில் இன்று இலங்கையை அச்சுறுத்தி வரும் நீரிழிவு நோய் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.