திருகோணமலை- ரொட்டவெவயைச்சேர்ந்த ஊடகவியலாளர் அப்துல்சலாம் யாசீம் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் கடந்த புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
2000ம் ஆண்டு கிண்ணியாவில் வெளிவந்த நேயம் பத்திரிகையில் ஊடகவியலாளராக கால் பதித்த இவர் இன்று திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் சமூகப்பிரச்சினைகளை வெளிக்காட்டும் ஊடகவியலாளராக வும். அரசியல் வாதிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றாத பட்சத்தில் பிரச்சினைகளை இணங்காட்டி அரசியல் வாதிகளின் கருத்துக்களையும் வெளியிட்டு வரும் ஊடகவியலாளராக வும் கடமையாற்றி வருகின்றார்.
அத்துடன் சிறு வயதிலிருந்தே மொறவெவ பிரதேசத்தில் சிறுவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வேண்டி சிறுவர் கழகங்களையும்.தமது கிராமத்தில் அஸ்மி என்ற பெயரில் பாலர் பாடசாலையொன்றினையும் உருவாக்கியதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினராகவும்.ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளராகவும் சேவையாற்றி வருவதுடன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் ஊழியராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் அப்துல்சலாம் -பாத்தும்மா ஆகியோரின் புதல்வரும் ஆவார்.