கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் கிடைக்கிறது - முதலமைச்சர்

அனா-
கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட இருக்கின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் கணக்காளருமான எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ். வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அபிவிருத்தியை நோக்கிய மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

இந்த நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக யுத்தம் இடம்பெற்று அதன்பின்பு சமாதானம் ஏற்பட்டு விடும், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுடைய உரிமைகளையும் பிரதிபலிக்கின்ற ஒரு சமாதான தீர்வாக அது வரும் என்று முப்பது வருடங்களாக இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பேச்சு வார்த்தைகளை நாங்கள் கண்டோம்.

இன்று அரசியல் தீர்வு வரும், நாளை அரசியல் தீர்வு வரும் என்று பேச்சுவார்த்தை முடிந்து விட்டு வெளியே சொன்ன வரலாறுகள் இந்த நாட்டு மக்களை ஏமாற்றிய வரலாறுகள்.

குறிப்பான சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஏமாற்றப்பட்ட வரலாறுகள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்ற காலம் அவ்வாறு ஏமாற்றப்பட்ட பேச்சுவார்த்தையாக இருக்காமல் திடீரென்று ஒரு அரசியல் அதிகாரம் பகிரப்படுகின்ற காலத்திலே பேசிக் கொண்டிருக்கின்றோம்.

எமது தொகுதி நிர்ணயம் அமைக்கின்ற விடயங்கள், எல்லை நிர்யணம் என்கின்ற பிரச்சனைகள், புதிய யாப்பு திருத்தப்படுகின்ற விடயங்கள், இந்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுடைய தலைவிதி எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று இரவு பகலாக ஆராய்ந்து அத்தனை விடயங்களிலும் எங்கெல்லாம் காய் நகர்த்த வேண்டுமோ, அங்கெல்லாம் காய் நகர்த்தி இந்த சமூகத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரேயொரு தலைவர் ரவூப் ஹக்கீம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

சமூக வலைத்தளங்களிலே தலைவர்களாகி விடலாம் என்று குறிப்பாக பிரதியமைச்சர் கட்சி சார்ந்த றிசாட் பதியூதின் அமைச்சர் இன்று சமூக வலைத் தளங்களில் தலைவராகி விடலாம் என்று கற்பனை பன்னிக் கொண்டு இல்லாத பொல்லாத அத்தனை ஊத்த விடயங்களின் குழுவை அமைத்து கட்சியை இழிவுபடுத்துகின்ற, எந்தவித அரசியல் உரிமைக்கும் அடி எடுத்து வைக்காமல், வட மாகாண மக்களுக்கு இதுவரை நிவாரணம் அழிக்க முடியாத ஒருவர் இன்று நாட்டு மக்களுடைய உரிமைக்காக பேசிக் கொண்டிருக்கின்ற பாசாங்கை நாங்கள் காண்கின்றோம்.

கைத்தொழில் அமைச்சைக் கொண்டுள்ள றிசாட் பதியூதின் கல்குடா தொகுதிக்கு ஒரு கைத்தொழில் பேட்டையை அமைக்க முடியாதா, அவ்வாறு முடியும் என்றால் கிழக்கு மாகாணத்தில் ஒரு கைத்தொழில் பேட்டையை அமைத்து காட்டுங்கள்.

கல்குடாத் தொகுதியில் எத்தனை இளைஞர், யுவதிகள் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நான் உங்களுக்கு கணக்கு போட்டு காட்டுகின்றேன். அரசியல் உரிமைகள் பற்றி பேசுகின்ற காலம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஒரு அரசியல் தீர்வுத் திட்டம் வர இருக்கின்ற வேலையிலே முஸ்லிம் சமூகம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலம். முஸ்லிம் சமூகம் முப்பது வருட போராட்டத்துக்காக உயிர்களை தியாகம் செய்து எதிர்கால சமூகம் கூனிக் குணியாமல் தலை நிமிர்ந்து கௌரவமாக நடக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

தீர்வு வருகின்ற காலத்தில் நாங்கள் பிரிந்து விடக் கூடாது. நீங்கள் எதிர்பார்க்காத ஒரு சூழலிலே தீர்வு வரலாம். மாகாண சபையினுடைய அதிகாரங்கள் முழுக்கு முழுக்க பலப்படுத்தப்பட்ட மாகாண சபை இந்த தீர்விலே அந்த மாகாண சபை பிரகரனப்படுத்தபட இருக்கின்றது.

கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட இருக்கின்றது. மாகாண சபைக்கு அதிகாரங்கள் எழுத்திலே வழங்கப்பட்டிருந்தது. 13வது அரசியல் திருத்தத்திலே 95 வீத அதிகாரம் கல்விக்கும், சுகாதாரத்திற்கும், 99 வீதத்திற்கு மேல் உள்ளுராட்சி அதிகாரம் மாகாண சபைக்கு உள்ளது என்றார்.

இதன்போது அந்நூர் தேசிய பாடசாலை மாணவரால் வரையப்பட்ட முதலமைச்சரின் புகைப்படம் முதலமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -