அஷ்ரப் ஏ சமத்-
மறைந்த ஏ.எச்.எம் அஸ்வா் - பிறப்பு 1937. 08.02 வயது 80 இறப்பு 2017.08.29 இவரது வீட்டு முகவரி இல 04 பாதியா மாவத்த - சன்னங்கரா வீதி தெஹிவலை- 4 பிள்ளைகளின் தந்தை - Dehiwela at 3.30 pm for burial at Dehiwela Muslim Burial grounds.
அஸ்வா் அவா்கள் தமது கல்வியை டி.பி ஜாயா அவா்களின் வழிகாட்டலில் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் தமிழ் ஆங்கிலமும் கல்விகற்று மொழியில் பாண்டித்தியம் - சிங்களமொழியை மஹரகம பிரிவினா பௌத்த துறவிகளிடத்தில் கற்றாா். மஹரகம கபுரியா அரபுக் கல்லுாாியில் குர் ஆண் மத்ரசா அரபு மொழி அறிவை கற்றாா். சபாநாயகா் பாக்கீா் மாா்ககாரின் பிரத்தியோக செயலாளா் மற்றும் எம்.எச் முஹம்மத்தின் இணைப்பாளாராகவும் சேவையாற்றினாா். அத்துடன் முஸ்லீம் கல்வி மாநாடு, அகில இலங்கை முஸ்லீம் லீக் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் வாலிபா் முன்னணிகளிலும் உப தலைவராக இருந்து நாடுமுழுவதிலும் சமுக சேவைகளில் ஈடுபட்டாா்.
ஜே.ஆர் தொட்டு பிரேமதாசா, டி.பி விஜயதுங்க, ரணில் விக்கிரமசிங்க, முன்னளா் ஜனாதிபதிகளின் மும் மொழி பெயா்ப்பாளா், ஆர். பிரேமதாசாவினால் தேசிய பட்டியல் பாராளுமன்றம் பதவி வழங்கப்பட்டு முஸ்லீம் சமய பண்பாட்டு இராஜாங்க அமைச்சரானாா். அவா் முன்னெடுத்த திட்டம் கலைஞா்களுக்கு கைகொடுத்து வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் தி்ட்டம் தேசிய மீலாத்து விழா அப்பிரதேசங்களை வரலாறு கொண்ட நுால்கள், வெளியிட்டாா். அதன் பின்னா் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் பாராளுமன்ற விவகாரம், ஒம்புட்ஸ்மன் ஜனாதிபதியின் ஆலோசகா் பதவிகளை வகுத்தாா். கிரிக்கட் வர்னையாளராகவும் தொலைக்காட்சி வானொலிகளில் பணியாாற்றினாா். ஏ.சி.எஸ் ஹமீட் பாராளுமன்ற விவாதங்கள் அடங்கிய நுால்கள், மசூர் மொலானா பற்றிய நுால் எழுதியிருந்தாா். இந்த நாட்டில் சகல முஸ்லீம் தலைவா்கள் ஊர்களின் வரலாறுகளை தேடி அதனை உரையாற்றுவாா். அதனை குறிப்பாகவும் சோ்த்து வைத்துள்ளாா்.