பேருவளை காலி வீதி அத்துகோரளை ஹாட்வெயாருக்கு அருகாமையிலுள்ள (மஸ்ஸலை குறுக்கு வீதி) ரயில் கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது. "இன்றைய தினம் உத்தியோகத்தர் கடமையில் இல்லை" என சிறியதொரு அறிவித்தல் பலகை கடந்த சில நாட்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ரயில் வரும்போது ரயில் கடவை திறந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
இதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே இக்கடவையில் கவனமாக செல்லுமாறு வேண்டிக்கொள்வதோடு விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கும் நோக்கில் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
மேலும் இக்கடவையில் பணியாற்றுவதற்கு ஒரு பணியாளரை நியமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் உரியவர்களிடம் வேண்டிக்கொள்கின்றேன்.
ரூமி ஹாரிஸ்.