மு.இராமச்சந்திரன்-
நல்லாட்சி அரசாங்கத்தில் திருடர்களுக்கு இடம் இல்லை அவ்வாறு இருப்போர் விலக்கப்படுவார்கள். கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்துவருவதாகவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார். 40 ஆண்டு கால பாராளுமன்ற அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி நுவரெலியா மாவட்ட பரளுன்ற உறுப்பினர் கே.கே.பியாதாஸவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
வரவேற்பு நிகழ்விற்கு வருகைத்தந்த பிரதமர் அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம். நீக்லோதாமய விகாரை மற்றும் ஜும்மா பளிவாசாலில் இம்பெற்ற விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் அட்டன் மட்டகளப்பிற்கான புதிய பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார் அதனைத்தொடர்ந்து டி.கே.டபில்யூ கலசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்;
கடந்த ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஊடகங்கள் மூடி மறைத்தது ஆனால் நல்லாட்சி ஆரசினால் பெற்றுக்கொடுத்த ஊடக சுதந்திரத்தின் பின்னர் எம்மை தாக்கி செய்தி வெளியிடுவதிலேயே ஈடுபட்ட வருகின்றனர். ஆனால் நான் ஊடக நிறுவனங்களுக்கு நெருப்பு வைக்கவில்லை. மத்திய வங்கியின் பினைமுரி விவகாரம் தொடர்பில் நீதிபதிகள் அடங்கிய சுயாதீன குழு ஒன்றை ஸ்தாபித்து விசாரணை ஆரம்பித்துள்ளோம் அதே போல உமா ஓயா திட்டம் தொடர்பில் விசாரணை குழு ஆரம்பிக்க என்னியுள்ளோம் இதற்கு ஒன்றினைந்த எதிர் அணியினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.
நல்லாட்சியில் பொலிஸ். நீதிமன்றம் அரசதுறை. மற்றும் ஊடகம் .அதே போன்று அமைச்சர்கள் நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த காலத்தில் நீதித்துறையினர் அரச கையாளாக இருந்தனர். சுயதீனமாக இயங்கியிருந்தால் அவர்களுக்கு வெள்ளை வேண் வந்திருக்கும். அம்பந்தோட்டை துறைமுகத்தினால் 46 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை விமான சேவையில் கடந்த ஆட்சியில் இறக்குமதி செய்யப்பட்ட பிக் 360 விமானம் 8 கொள்வனவு செய்யப்பட்டதில் 135 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதைப்பபற்றி ஊடகங்கள் வெளிக்கொண்டு வருவதில்லை.
தற்போது அம்பந்தோட்டை துறைமுகத்தில் ஏற்ட்ட நட்டத்தை நிறுத்தியுள்ளோம் இனி அந்த முதலீடு ஊடாக இந்த பிரதேச அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம் என்றார். மேலும் கினிகத்தேன பிரதேசத்தில் சிங்கள மக்களுக்கான குடியிருப்பு பிரச்சினையையும் தமிழ் உயர்தர பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன் தொழில் போட்டைகள் அமைத்து இளைஞர் யுவதிகளுக்கான வேலை வய்பினை அதிகரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.