நிந்தவூரில் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு..!

சுலைமான் றாபி-
நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், சமூக வலுவூட்டல் அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான வை.எல்.சுலைமாலெவ்வையின் முயற்சியின கீழ் சமூக வலுவூட்டல் அமைச்சினால்; 1000 (ஆயிரம்) பேர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நாளை (19) சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நிந்தவூர் கமு/அல்-அதான் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.சி.எம். றிபாய் தெரிவித்தார். 

கடந்த மே மாதம் 06 ம் திகதி தமது கழகத்தினரால் முதற்கட்டமாக 1000 பேர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டபோதும், முதல் மூன்று கட்டங்களாக இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், இதில் பொது மக்கள் தங்களது கண்களை இலவசமாக பரிசோதித்து உடன் மூக்குக் கண்ணாடிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே நுவன் ஜே விஜேசிங்ஹ, நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல், அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ. இம்ருபஸ்கான் உள்ளிட்ட முக்கிய அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -