கோழைகளாக வாக்களிக்கின்ற தலைவர்களுக்கு வீர வசனம் எதற்கு..?

எம்.ஜே.எம்.சஜீத்-
பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி சட்டமூலத்திற்கு முஸ்லிம் தலைமைகள்ஆதரவளித்தமை பெரும் வரலாற்று துரோகமென முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், மாகாண சபைஉறுப்பினருமான எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார். உள்ளுராட்சி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடந்துகொண்டவிதம் குறித்து நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

உள்ளுராட்சி வட்டாரப் பிரிப்பில் நாடு பூராகவும் முஸ்லிம்களுக்கு பாரிய அநியாயங்கள் நடைபெற்றுள்ளன, என்றுபாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பிரதமர் வாக்குறுதி தந்தால் இதற்கு ஆதரவாகவாக்களிப்போம்; இல்லையெனில் பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு போராடுவோம் என சூழுரைத்தார்கள். இவர்கள்முஸ்லிம் சமுகத்தை ஒரு மடைமைச் சமுகமாக எடை போட்டிருப்பது இந்த சட்டமூல விவாதத்தில் ஆடிய நாடகத்திலும்அதனைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாக வாக்களித்ததிலும் தெளிவாகப் புலப்படுகிறது.

உள்ளுராட்சி வட்டாரப் பிரிப்புக்கான நடவடிக்கை கடந்த அரசாங்கத்தில் அமைச்சர் அதாவுல்லாவின் காலத்தில்ஆரம்பமானது. இடையில் ஒரு குறுகியகாலம் கரு ஜயசூரிய இந்த அமைச்சுக்கு பொறுப்பாக இருந்தார். அந்த சிறியகாலப்பகுதியைத் தவிர இந்த அமைச்சு தொடர்ந்தும் ஒரு முஸ்லிம் அமைச்சரின் கீழ் இருந்து வருகின்றது. இந்தஅமைச்சர்களும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளைஎடுத்திருக்கிறார்கள்.

அத்துடன் இதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மற்றும் மேன்முறையீட்டுக் குழு ஆகியவற்றில் பொதுமக்கள், சிவில்சமுகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் இவ்வட்டாரப் பிரிப்பு சம்மந்தமாக பல தடவை சந்தித்து அறிக்கைகளையும் முறைப்பாடுகளையும் வழங்கியிருக்கின்றார்கள். இவை எல்லாவற்றிற்கும் மத்தியிலும் முஸ்லிம்களுக்கு நாடுபூராகவும் அநியாயம் இடம்பெற்றிருக்கின்றது. இந்நிலையில் பிரதமர் வாக்குறுதி தந்தால் அனைத்துப் பிழைகளும் சீர்செய்யப்பட்டுவிடுமா?

பிரதமர் வாக்குறுதி தந்தால் வாக்களிப்போம் என இத்தலைமைகள் சொன்னது ஏற்கனவே வாக்களிப்பதற்குத்தீர்மானித்துவிட்டு மக்களை ஏமாற்றுவதற்காக ஆடிய நாடகமே தவிர வேறில்லை. இல்லையேல் இவர்கள்உண்மையான முஸ்லிம் தலைமைத்துவம் என்றிருந்தால் இச்சட்டமூலத்திற்கு வாக்களிக்காது சட்டமூலம்நிறைவேற்றுவதை தாமதிக்கச் செய்து இந்த வட்டாரப் பிரிப்பில் முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளை அடுத்துஇரண்டொரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்து தரவைத்துவிட்டு, அதன் பின் இச்சட்ட மூலத்தை கொண்டுவரச் செய்துஆதரவளித்திருக்கலாம். 

ஆனால் சுகபோகங்களுக்கு சோரம்போன நமது தலைமைத்துவங்கள் பிரதமர் வாக்குறுதியளித்தால் அதனைஆதரிப்போம் எனக்கூறி, பிரதமர் வாக்குறுதி தந்துவிட்டார் ஆதரித்துவிட்டோம்; என்று சட்டமூலத்திற்கு ஆதரவாககையை உயர்த்தியிருக்கிறார்கள். இவர்கள் பிரதமரிடம் வாக்குறுதி கேட்டுப்போனதே வாக்களிப்பதற்கு முதல்நாள்தான். அதனை அவர்களது பாராளுமன்ற உரையிலேயே வெளிப்படுத்தி விட்டார்கள்.

குறிப்பாக ஏன், இச்சட்டமூலம் அமைச்சரவைக்கு வரவில்லையா? அப்பொழுது இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்..? ஏன் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்று நீதிமன்றம் செல்வதற்கான இரண்டு வார காலக்கெடு வழங்கப்பட்டு, நீதிமன்றம் தன்முடிவை அறிவித்து அதன்பின்புதானே விவாதத்திற்கு எடுக்கப்படும்; அதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்கள். மக்களின் உரிமையைக் காவுகொடுப்பதுமில்லாமல் வீரவசனங்களைப் பேசிக்கொண்டு உலாவும் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கத்திற்குத் தேவையான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையாளர் இச்சட்டமூலம்நிறைவேற்றப்பட்டதிலிருந்து 75 தொடக்கம் 100 நாட்களுக்குள் தேர்தல் நடாத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார். அதேநேரம் பிரதமரும் பிழைகளைப் பின்னர் திருத்திக் கொள்ளலாம்; அவசரமாக உள்ளுராட்சித் தேர்தலை நடாத்தவேண்டும்; என்று தெரிவித்திருக்கின்றார். பல ஆண்டுகள் ஆணைக்குழு அமைத்து மேன் முறையீட்டுக் குழு அமைத்து முஸ்லிம்கள் சார்பாக பல தரப்பினர் முறைப்பாடு செய்தும் முஸ்லிம்களுக்கு இந்த அநியாயத்தை செய்தவர்கள் அடுத்தஒரு சில வாரங்களுக்குள் இந்த அநியாயங்களுக்கெல்லாம் தீர்வு தந்துவிட்டா தேர்தல் நடாத்துவார்கள்? என மிக ஆழமாகசிந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு பக்கம் கூடினால் ஒரு பக்கம் குறையும். இவைகளுக்குத் தீர்வு காண விளைகின்றபொழுது பல இடங்களில் அடுத்தசமுகங்களின் எதிர்ப்பினை சந்திக்க வேண்டியிருக்கும். சட்டமூலம் நிறைவேற்றப்படாமல் இருந்திருந்தால் அரசுக்கு ஓர்அழுத்தம் இருந்திருக்கும், எப்படியாவது பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டிருப்பார்கள். இந்நிலையில் பிரதமர் வாக்குறுதிதந்தார்; ஆதரவளித்தோம்; என்று இவர்கள் தலையாட்டு பொம்மைகளாக ஆதரவளித்ததன் மூலம் பல பிரதேசங்களில்பாராளுமன்ற பிரதிநிதித்துவமும், மாகாண சபைப் பிரதிநிதித்துவமும் பெற முடியாத சூழ்நிலையில் அம்மக்களுக்குஏதாவது பிரச்சினைகள் வருகின்றபொழுது ஓடியாடித்திரிந்து அம்மக்களுக்காக எங்காவது பேசுவதற்கு என்றிருந்தஉள்ளுராட்சிப் பிரதிநிதித்துவங்களையும் இன்று இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இது எமது மக்களின்அடிப்படைப் பிரச்சினை, இதனைத் தீர்க்காமல் நாங்கள் சட்டமூலத்திற்கு வாக்களிக்கமாட்டோம்இதனை ஒத்தி போடுங்கள் என்று சொல்லுகின்ற தைரியம் ஏன் இவர்களுக்கு இல்லாமல் போனது ? மக்கள் மடையர்கள்என நினைத்துக்கொண்டு வெற்று வீர வசனங்களைப் பேசிவிட்டு அதனை சமுக வலைத்தளங்களில் போட்டு பிரபல்யம்தேடுகின்றார்கள். தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் வீர வசனம் பேசும் இத்தலைமைகள் செயற்பாட்டில் வேறுவிதமாகநடந்துகொள்வது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒருவிடயமாகும்.

அது மட்டுமல்லாமல் "பதவியைத் தூக்கி வீசுவேன்" என்ற கோசத்திற்கு பிரபல்யமான முஸ்லிம் தலைமைகள்அக்கோசத்தை இந்த சட்டமூல விவாதத்தின்போதும் முன்வைத்துள்ளார்கள். மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வீரவசனம் பேசும் இவர்கள் இறுதியில் அற்பசொற்ப சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கோழைகளாக மாறுகின்றநிலைமைகள் தொடதேர்ச்சியாக நடந்துகொண்டு வருகிறது. எனவே முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் மிகவும்அவதானமாக இருந்துகொள்ள வேண்டும்.

இப்பொழுது சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாகிவிட்டது. அரசாங்கத்திற்கு தேவையான விடயம் நடந்துவிட்டது.முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இறுதியில் முஸ்லிம் சமூகத்திற்குகிடைத்த பரிசு வழமையான வெற்று வாக்குறுதிகள் மாத்திரமே எனவே அடுத்த ஒரு சில வாரங்களில் இந்த வீரச்சிங்கங்கள், முஸ்லிம்களுக்குத் தீர்வு தரவில்லை என்று வீர வசனம் பேசுவார்கள். அதனை சமுக வலைத்தளங்களிலும்சந்தைப்படுத்துவார்கள். என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் சம்மேளனக்கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதுமத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த உள்ளுராட்சி சட்டமூலம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரானது. இதனூடாகமுஸ்லிம் சமூகத்திற்கு பாரிய துரோகமிழைக்கப்பட்டுள்ளது. எனவே இச்சட்டமூலத்தினை திருத்தியமைக்க வேண்டும்எனத்தெரிவித்தார்.

உள்ளுராட்சி சட்டமூலம் தொடர்பில் அமைச்சர் மணோகனசன் தன்னந்தனியாக நின்று தனது சுமூகத்திற்காக குரல்கொடுத்து வெற்றிகன்டுள்ளார். இது ஏனைய சிறுபான்மை அரசியல் தலைமைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்தவிடயமாக அவர் அமைச்சரவையிலே முரண்பட்டுக்கொண்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். பின்னர் அமைச்சர் மணோகனசனின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மலையகத்திலே உள்ளுராட்சி மன்றங்களின்எண்ணிக்கையை அதிகரிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழ்அரசியல் தலைமைகள் போராடுகின்ற இக்காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமை விடயத்தில் முஸ்லிம் அரசியல்தலைமைகள் அற்பசொற்ப இலாபங்களுக்காக சோரம் போகின்ற நிலைமைகள் குறித்து கவலையடைய வேண்டியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இரண்டு முக்கியமான திருத்தச் சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நமது நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல்செய்வதற்கான பிரதேச சபை திருத்தச் சட்டமும், நமது மக்களின் பூர்வீகக் காணிகளை இழக்க கூடிய வகையிலான நாடு, நகர திருத்தச் சட்ட மூலமும் கிழக்கு மாகாண சபையின் ஆதரவைக் கோரி முன்வைக்கப்பட்டது. இதன் போது நாங்கள்ஆளும் தரப்பினர்களாக இருந்து அமைச்சர்களாக பதவி வகித்த போதும் பல சவால்களுக்கு முகம் கொடுத்த நிலையில்நமது சிறுபான்மை மக்களுக்கு துரோகம் இழைத்துவிடக் கூடாது அந்த சட்ட மூலங்களை ஆதரிக்காதுதிருப்பியனுப்பினோம். இது கிழக்கு மாகாண சபையை பொறுதுதவரை ஒரு வரலாற்று நிகழ்வாகும். எனவும் அவர்மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -