மலையகத்தில் பிரதேச செயலகங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை - அமைச்சர் திகாம்பரம்

க.கிஷாந்தன்-
லையகத்தில் இருந்த தலைவர்கள் எவரும் பிரதேச செயலகங்களையோ பிரதேச சபைகளையோ அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் வந்த பிறகு தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசசபைகளையும், பிரதேச செயலகங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் அக்கரைபத்தனையில் ஒருவர் ஒரு கடிதம் வாங்க வேண்டும் என்றாலும் கொட்டகலைக்கு செல்ல வேண்டும்.

அத்தோடு அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் எந்த ஒரு அபிவிருத்தி வேலையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் எப்போது இந்த பாலங்களை புனரமைத்திருக்க வேண்டும். நான் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் பேசி தான் மலையகத்தில் பல பாலங்களை புணரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். நாங்கள் செய்யும் அபிவிருத்திகளை பொறுக்க முடியாத சிலர் எங்களை குறை கூறி வருகிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அக்கரபத்தனை, தலைவக்கலை, டயகம் பிரதான வீதிகளில் சுமார் 30 கோடி ரூபா செலவில் புனரமைக்கபடவுள்ள அக்கரபத்தனை ஆக்ரோவா பாலத்தின் வேலைகளை 28.08.2017 அன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அக்கரபத்தனை ஆக்ரோவா பாலத்திற்கு 10 கோடி ரூபாவும் மன்றாசி நகரிலுள்ள பாலத்திற்கு 20 கோடி ரூபா செலவிலும் புனரமைக்கப்படவுள்ளன.

கடந்த அரசாங்கத்தினால் இப்பாதையினையும் பாலங்களையும் புனரமைத்து தருவதாக தெரிவித்திருந்த போதிலும் அப்பாலங்கள் புனரமைக்கப்படவில்லை. இந்நிலையில் பழமை வாய்ந்த இப்பாலங்கள் மிகவும் அவதானமான நிலையிலேயே காணப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையின் பின் தான் இந்த பாலங்கள் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, எம்.ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -