அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான நல்லிணக்கநேய ஊடகச் செயலமர்வு மட்டக்களப்பு பிரிஜ் விவ் ஹோட்டலில் திங்கட்கிழமை (28) இடம் பெற்றது. இதனை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சும் , பாக்கீர் மாக்கார் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது சமூக நல்லிணக்கம் தொடர்பான குரும் படங்கள், கலந்துரையாடல்கள் ,குழுச் செயற்பாடுகளும் இடம் பெற்றன. இந் நிகழ்வில் முன்னால் அமைச்சரும் பாக்கீர் மாக்கார் நிலைய தலைவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி, கலாநிதி எம்.ரீ.எம்.மஹீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.