குருநாகல் பெந்தெனிகொட பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதே பகுதியிலுள்ள தைக்கா பள்ளிவாசல் மீதும் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நீதி, புத்தசாசன அமைச்சர் நேற்றைய தினம் பதவி விலகிய பின்னர் இடம்பெற்ற முதலாவது இனவாத தாக்குதல் இதுவாகும்.
பெந்தெனிகொட மஸ்ஜுதுத் தக்வா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் உஸ்வத்துல் ஹஸனா பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களின் கண்ணாடிகள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசல் நுழைவாயிலில் சிறுநீரும் கழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.