இலங்கை அச்சப்பட தேவையில்லை- அனர்த்த முகாமைத்துவ நிலையம்

ந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில், இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், இலங்கையில் சுனாமி ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது

சுனாமி, குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்தார்.

இது தொடர்பான அறிவித்தல்களை ஊடகங்கள் வாயில்களாக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் இதனால், மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -