மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாமபரம் அவர்களின் நிதியொதுக்கீட்டின் மூலம் டிக்கோயா (செண்பகவத்தை) தோட்டத்தில் 20 தனிவீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 19-08-2017 ஆம் திகதியன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தொழிலாளர் தேசிய முன்னனியின் தலைவரும், அமைச்சருமான பி.திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா, எம்.ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் உட்பட பல முக்கியஸ்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.