அனா-
முரண்பாடுகளையோ அல்லது ஒரு சுமூகமற்ற உறவுகளையோ ஊடகவியலாளர்களுடன் வகுத்துக் கொள்வதற்கு நான் விரும்பவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
கல்குடா ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் நிருவாக சபை உறுப்பினர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குமான சந்திப்பு நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையி;ல்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்குடா ஊடகவியலாளர்கள் ஒன்றியமானது ஆரோக்கியமான சூழ்நிலைக்கு அடி அத்திவாரமாக அமையும் என எதிர்பார்;க்கின்றேன்.
நான் ஊடகவியலாளர்களுடன் நெருக்கடியான சூழலுக்குள் வேலை செய்த நீண்டகால அனுபவம் உள்ளது. அந்த வகையில் கருத்து முரண்பாடுகளையோ அல்லது ஒரு சுமூகமற்ற உறவுகளையோ ஊடகவியலாளர்களுடன் வகுத்துக் கொள்வதற்கு நான் விரும்பவில்லை.
கல்குடா ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினர் ஒரு தூரநோக்கு சிந்தனையோடு செயற்பட வேண்டும் என வாழ்த்து தெரிவிப்பதோடு, இந்த மாவட்டத்தில் செய்யப்படுகின்ற அனைத்து விடயங்களும் பொதுமக்களினுடைய நலனை நோக்காக கொண்டமையாக முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
அந்த விடயங்கள் மக்களால் சரியாக புரிந்து கொள்வதற்கும், மக்களை சரியாக சென்றடைவதற்கும் ஊடகவியலாளர்கள் நிச்சயமாக பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
எங்களுடைய கருத்துக்கள் மக்களை சென்றடைவதற்கும், மக்களிடம் காணப்படும் பிரச்சனைகள், தேவைகள், அவர்களுக்கான தீர்வுகள் சம்பந்தமாக செயற்படுவதற்கு கல்குடா ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினர் செயற்பாடுவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன், இவர்களுக்கு எனது ஆதரவு என்றும் உள்ளது எனறும் தெரிவித்தார்.