எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி கற்கும் என்.எப்.சஸ்னா எனும் மாணவி பாடசாலையில் கிடந்த ஒரு தொகைப்பணத்தைக் கண்டெடுத்து அதிபரிடம் வழங்கிய சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (18)ம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி பாடசாலை விட்டு வீடு செல்ல ஆயத்தமான போது, பாடசாலை வளாகத்தில் கண்ட பணத்தினை எடுத்து அதிபரிடம் ஒப்படைத்தமையால், அந்த மாணவியின் செயலைக்கண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, காலை ஆராதனை நிகழ்வில் அந்த மாணவியின் செயலை ஏனைய மாணவிகளுக்கு மத்தியில் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்கள் தெரியப்படுத்தி மாணவிற்கு பரிசினையும் வழங்கி வைத்தார்.
இவ்வாறான நல்ல பழக்க வழக்கம், பண்பாடுள்ள மாணவ சமூகம் நம்மத்தியில் உருவாக வேண்டுமென்று மாணவிகள் மத்தியில் அதிபர் தெரிவித்தார். கண்டெடுக்கப்பட்ட பணத்தொகை பாடசாலை ஆசிரியருடையது என்பதால் அப்பணம் ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.