நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
அம்பகமுவ பிரதேச சபைக்குற்பட்ட மாணிக்கவத்தை பஸ்தரிப்பு நிலையத்தை புணரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். அட்டன் வெளிஓயா பிரதான வீதியின் மாணிக்கவத்தை பஸ்தரிப்பிடமே உடைந்து விழும் நிலையின் அபாயகரமாக பயன் படுத்த முடியாத நிலையிலுள்ளது.
மாணிக்கவத்தை பிரதேசத்தை சேர்ந்த 500 மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் பஸ்தரிப்பு நிலையமானது. அட்டன் நகரிற்கும் வருகைத்ருவோரும் பாடசாலை மாணவர்களும் மழைகாலங்களில் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். பஸ்தரிப்பிடத்தை புணரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உனனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.