பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு ஒரே கயிற்றில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

ந்தியா : பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரே கயிற்றில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது. இச்சம்பவம் மடிப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மடிப்பாக்கம் செந்தூரர் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் முருகன் (49). ரயில்வே அதிகாரி. இவரது மனைவி லட்சுமி (45). தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர்களது மகள் சங்கீர்த்தனா (17). மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை முருகன், லட்சுமி ஆகியோர் வேலைக்கு சென்றனர். பின்னர் சங்கீர்த்தனா கல்லூரிக்கு சென்றார்.

மாலையில் லட்சுமி, மகளை செல்போனில் தொடர்பு கொண்டார். நீண்டநேரமாக ஒலித்தும் அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த லட்சுமி, பக்கத்து வீட்டுக்கு போன் செய்து, தனது மகளை அழைக்கும்படி கூறினார். அதன்படி அவர்கள், அங்கு சென்றபோது, கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வெகுநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சங்கீர்த்தனா, ஒரு வாலிபருடன் ஒரே கயிற்றில் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சங்கீர்த்தனாவுடன், தூக்கிட்டு இறந்த வாலிபர், நன்மங்கலத்தை சேர்ந்த ரவி (24). ஆட்டோ டிரைவர். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம், பெற்றோர்களுக்கு தெரிந்ததும், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், மடிப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -