ஹஜ்ஜுக்கு போன மச்சான்
+++++++++++++++++++++++++
ஹஜ்ஜுக்கு போன மச்சான்
ஹரம் ஷரீபில் இருக்கும் மச்சான்
எப்பவுமே fbயில இருக்கிறீர் - நீஙக
இரவும் பகலும் ஷெல்பீயாகப் போடுறீர்
cellக்குள் கதைப்பவளே
செல்வாக்க கூட்டனும்டி
ஹாஜியாரு- இந்த முறையும்
ஹஜ்ஜு போன எண்டு ஆட்கள் கதைக்க வேணுமடி
----
க.°.பாவைக் கண்டதுமே
கையேந்தச் சொன்னேனே
கருணை மிகு ரஹ்மானிடம்
கணவனே என்ன கேட்டீர்.
இருக்கின்ற நாலு கடை
எட்டாக பெருகவென்று
உருக்கமாய் நான் கேட்டேன்
ஒப்புக்கொள் ஆண்டவனே.
உருக்கமாய் நான் கேட்டேன்
ஒப்புக்கொள் ஆண்டவனே.
----
க.°.பாக்கு பக்கத்திலே
ஹை பை ஹோட்டேல்ன்னு
வானொலியில் சொன்னாக
வாக்குப்படி செய்தாகளா
இரண்டு மைல் அங்கால
இருக்குதடி தந்த ரூமு
மிரண்டு போய் நிற்கிறார்டி
மிச்சம் பேர் ஆட்கள் இங்கே
மிரண்டு போய் நிற்கிறார்டி
மிச்சம் இலங்கை ஆட்கள் இங்கே
---
செக்கு மாற இல்லையென்று
சின்னப் போடி கோல் எடுத்தார்
மக்காக்குப் போன என்றேன்
மனுசன் நல்லா திட்டிப் போட்டான்
அதெல்லாம் பார்த்தம் எண்டா
அமல் செய்ய முடியாதுடி
இதெல்லாம் யாவாரத்தில்
இருக்கிற தந்திரம்டி
இதெல்லாம் யாவாரத்தில்
இருக்கிற தந்திரம்டி
----
எனக்கெண்டா தெரியாது
இன்று ஒரு முப்தி சொன்னார்
அடுத்தவர்க்கு ஆப்பு வெச்சு
அமல் செய்தல் வீண் என்று
நாளைக்கு மறுமையில
நாயன் கேள்வி கேட்பானுங்க
தெளபா செய்திடுங்க
தப்பு எல்லாம் விட்டிடுங்க.
தெளபா செய்திடுங்க
தப்பு எல்லாம் விட்டிடுங்க.
Mohamed Nizous