நாட்டுக்கு பாதகமான செயல்களை தட்டிக்கேட்டால் வெளியே போக வேண்டும் - நாமல்

நாட்டுக்கு பாதகமான செயல்களை இவ்வாட்சியாளர்கள் முன்னெடுக்கும் போது அதனை தட்டிக்கேட்டமைக்காவே நீதி அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார் என்பதை எத்தனை பேர் அறிவர் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டதாவது,

விஜயதாச ராஜபக்ஸவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஐ.தே.கவினர் கடும் பிரயத்தனங்களைமேற்கொண்டனர்.இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடயத்தில் நீதியை நிலைநாட்ட முடியாமல்போனமைக்கு இவர் தான் காரணம் என்ற போலியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாம் தான் பிரச்சினை என்றால் இரண்டு வருடங்கள் ஏன் பொருந்திருந்தார்கள்.கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போதுகூட விஜேதாசவ நீக்கியிருக்க முடியும்.

அது தவிர ஒருவருக்கு நீதி வழங்கும் விடயத்தில் அமைச்சரின் தலையீடு இருக்க முடியாது. அப்படி தலையீடு இருந்தால்அது நீதியாகவே இருக்க முடியாது. இக் கருத்தை சிந்தித்தாலே இக் காரணங்கள் எல்லாம் பொய்யானது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.இவர்கள் கூறுவது உண்மை என்றால் இத்தனை நாளும் இலங்கை நீதித் துறையானது செத்து கிடந்ததுஎன்பதை இலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் உரிய முறையில் நீதியை நிலைநாட்டாத பல சந்தர்ப்பங்கள் உள்ளன.அதற்கு நீதி அமைச்சர் காரணமாகஇல்லை. இவ்வாட்சியின் உச்ச முக்கியஸ்தர்கள் தான் காரணமாக அமைந்தார்கள். முன்னாள் ஜனாதிபதி விடயத்தில்விசாரணைகள் அனைத்தையும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று இலங்கை நாடு சர்வதேச அழுத்தங்களுக்கு அடி பணிந்தும் சுயநலன்களை அடிப்படையாக கொண்டும் சர்வதேசஆட்சியாளர்களின் கால்களில் மண்டியிட்டு கிடக்கின்றன. சர்வதேசமானது இலங்கையில் தமிழர்களின் விடயங்களில்நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டை எதிர்பார்க்கின்றது.இதற்கு நீதி அமைச்சர் விஜயதாசராஸபக்ஸ இடம்கொடுக்கவில்லை.இது போன்று இன்னும் சில விடயங்கள் உள்ளன.அதனை நேரம் வரும் போதுவெளியிடலாமென்றுள்ளோம்.

இது போன்று தான் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க துறைமுக அமைச்சில் இருந்துகொண்டு சர்வதேசங்களில் இலங்கைநாட்டை அடமானம் வைப்பதை தனது அமைச்சின் மூலம் தடுத்து நிறுத்தினார். நல்லாட்சி அவரை குறித்தஅமைச்சிலிருந்து நீக்கி தனது விடயங்களை சாதித்துக் கொண்டது.இவற்றையெல்லாம் வைத்து சிந்தித்தால் இவற்றின்உண்மை தன்மைகளை அறிந்துகொள்ளலாம். எங்களது இலங்கை நாட்டை இவ்வாட்சியாளர்களிடமிருந்து காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அவர்குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -