ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதனை




ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் முன்னிலையில் ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு வளவில் வெள்ளிக்கிழமை (25.08.2017) காலை இடம்பெற்றது.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர், சமன் யட்டவர பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கொண்டதுடன் பொலிஸாரிடம் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.

இதன்போது பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள், துப்பாக்கிகள் என்பனவற்றின் தராதரம் பரிசீலிக்கப்பட்டதுடன் பொலிஸாரின் ஆளுமைத் தோற்றம், ஆரோக்கியம் உட்பட அவர்களது சேம நலன்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகள் இந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -