களுத்துறையில் பெண்களுக்கான பயானும் பகிரங்க மார்க்க சொற்பொழிவும்..!

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நாளை (25) வெள்ளிக்கிழமை அஸர் தொகை முதல் இடம் பெறவுள்ளது.

‘நவீன உலகில் பிள்ளை வளர்ப்பு’ என்ற தலைப்பில் இச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.

அதேவேளை, அன்றைய தினம் (25) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ‘சமூக சீர் கேடுகளும் அதற்கான தீர்வுகளும்’ எனும் தலைப்பில் களுத்துறை அத்தக்வா மஸ்ஜித் அருகாமையில் அமைந்துள்ள கலீல் பிளேஸ் விளையாட்டு மைதானத்தில் பகிரங்க மார்க்கச் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.

பிரபல மார்க்க சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் (ஷரயி) கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில், மார்க்கத்தை தூய வடிவில் அறிந்திடவும் - பயனடையவும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -