செஞ்சிலுவைச் சங்கம் சிரிலிய சவிய அமைப்புக்கு பெற்றுக்கொடுத்த டிபென்டர் வாகனத்தை யோஷித்த ராஜபக்சவின் பாவனைக்கு வழங்கியமை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை வழங்க தனக்கு ஒரு மாத காலஅவகாசத்தை தருமாறு முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களம் ஷிரந்தி ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்திருந்தது. எனினும் தன்னால் அன்றைய தினம் ஆஜராக முடியாது என ஷிரந்தி ராஜபக்ச தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வாக்குமூலத்திற்கான ஆவணங்கள் தயாரிக்கும் தேவை இருப்பதால், வாக்குமூலம் வழங்க ஒரு மாத கால அவகாசம் தருமாறு ஷிரந்தி ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் சிரிலிய சவிய அமைப்புக்கு சொந்தமான டிபென்டர் வாகம் கண்டுபிடிக்கப்பட்டது.