ஒரு மணப்பெண்ணும் மணாளனும் உள்ள புகைப்படத்தின் தலைகளை மாற்றி அதில் ரவூஃப் ஹக்கீமினதும் குமாரி குரேயினதும் போட்டோக்களை எடிட் பண்ணியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்பதில் உலமா கட்சி உறுதியாக உள்ளது.
ஹக்கீம் குமாரி உறவு உண்மையானது என்பது குமாரியின் பொலிஸ் வாக்குமூலம் சொல்கிறது. அதற்காக இவ்வாறான போலி போட்டோக்களை வெளியிடுவதை அனுமதிக்க முடியாது.
அதே வேளை இத்தகைய போட்டோவை வெளியிட அமைச்சர் ரிசாத் பதியுதீன் இரண்டு லட்சம் கொடுத்து தெஹிவளயில் ஸ்டூடியோ ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக ஹக்கீம் அனுதாபிகள் கதை கட்டிவிட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறு போட்டோக்களை எடிட் செய்வதற்கு லட்சக்கணக்கில் அல்ல ஆயிரக்கணக்கில் கூட செலவு செய்யத்தேவையில்லை. சிறுவர்கள் கூட ஸ்மாட் போன்களில் இவ்வாறு செய்கிறார்கள்.
இதற்குப்போய் அமைச்சர் ரிசாத் லட்சக்கணக்கில் செலவு செய்கிறார் என்பது அதீத கற்பனையாகும். அமைச்சர் ரிசாத் பற்றி எமக்கு நன்கு தெரியும். அவர் இப்படியான ஈனச்செயலுக்கு உதவுவர் அல்ல. ஆகவே முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நிச்சயமாக இவற்றுக்கும் மறுமையில் இறை தண்டனை உண்டு என்பதை எச்சரிக்கிறோம்.
முபாறக் அப்துல் மஜீத்.