என் அயலவனுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும்..

என் அயலவனுக்கு,

வாதங்களால் முடக்கப்பட்டு உணர்வுகளை உசுப்பி உன்னையும் என்னையும் பிரித்தாளும் பொய்மை நிரப்பிய அரசியல் போக்கிற்கு முடிவு கட்டுவோம், இது வரலாற்று தேவை.

அஸ்ஸலாமு அலைக்கும்.

முஸ்லீம் அரசியல் அடையாளத்தை முஸ்லீம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை அங்கீகரிப்பதில் முதன்மையாக இருந்தவர்களாகவும், முந்தானை ஏந்தி துஆ கேட்டு அதை கட்டியெழுப்பியவர்களில் முதன்மையானவர்கள் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை எனும் இரு பிரதேசததுக்குரியவர்களும் தான்.

பொத்துவிலில் எஸ்.எஸ்.பி.மஜீத், சம்மாந்துறை மஜீத், கல்முனை மன்சூர்,நிந்தவூர் முஸ்தபா போன்ற தலைவர்கள் இருக்கும் போதும் அவர்களை உடனடியாக வெறுத்து முஸ்லீம் அரசியலை அவ்வூரவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை,
ஆனால் அக்கரைப்பற்று உதுமா லெப்பையும், அட்டாளை்ச்சேனை ஜலால்தீனையும், விட்டு உடனடியாக முஸ்லீ்ம்களின் இயக்கமான முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கினோம்.

ஜலால்தீனுக்கு அக்கரைப்பற்று மக்கள் அதீக வாக்குகள் வழங்கி பாராளுமன்ற உருப்பினராக உருவாக்கி அவர் சதி மூலம் கவிழ்க்கப்பட அந்த இடத்தில் அக்கரைப்பற்றில் இருந்த உதுமாலெப்பை எனும் மகனை எம்.பி யாக்கி அழகு பார்த்த ஒற்றுமையின் இருப்பிடம்தான் எமது ஊர்கள் என்பதை வரலாறு உரைக்கும்.

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களால் இன்றைய தேசியகாங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் முஸ்லீம் காங்கிரஸின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதெல்லாம் அவரை அங்கீகரித்தீர்கள் என்பது வரலாற்று உண்மை.

2003-2004 காலப்பகுதியில் எமது முஸ்லீம் அரசியல் இயக்கம் திசை மாறி தான் உருவாக்ப்பட்ட நோக்கங்களையும், அதன் தனித்துவத்தையும் மறந்து தனி மனித நோக்கங்களுக்காக பயன்படுத்தபட்ட போது மொத்த சமுகத்தையும் இனக்குழு என்றும் சமூகமாக அங்கீகரிக்க முடியாத நிலையும், மூன்றாம் தரப்பாக இல்லாமல் அரச தரப்பில் நோர்வே புலிகள் ரணிலுடைய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹக்கிமின் வங்குரோத்து அரசியலை எதிர்த்து அதாஉல்லாஹ் வெளியே வந்த போதில் இருந்துதான் எம்மை பிரித்தாளும் பிரதேசவாத தீயையும் மூட்ட தொடங்கினர்.

அது இன்னுமொரு சந்ததிக்கு கடத்தப்படுவற்க்கு முன் தடுத்து நிறுத்த வேண்டும்.

அக்கரைப்பற்று வீதியை அபிவிருத்தி செய்யும் போது அட்டாளைச்சேனை வீதியை விஸ்தரிக்க கோரிய போது அதை ஏற்க மறுத்து பின் அக்கரைப்பற்று வீதியை மாத்திரம் அபிவிருத்தி செய்திருக்கிறான் என பிரதேசவாதத்தை கிள்ளி தொட்டில் ஆட்டிய பெருமை மாத்திரம்தான் முஸ்லீம் காங்கிரஸ் இன்றைய தலைமைகளால் இயலுமாக இருந்தது.

இருந்தாலும் அட்டாளைச்சேனை எனும் பிரதேசத்தில் அதா வின் உண்மைகளை உணர்ந்து எம்மோடு அன்றிலிருந்து இன்று வரை பயணிக்கும் உதுமாலெப்பை எனும் தளபதியை பெற்றோம்.

நீங்கள் உங்களின் வாக்குகளில் சுமார் இருபது சதவீத வாக்குகளை எந்த தேர்தல் வந்தாலும் அளிப்பீர்கள் உதுமாலெப்பை இரு முறை அமைச்சராக வந்தார், பல அட்டாளைச்சேனை யின் வரலாற்று தேவைகளை நிவர்த்தி செய்திருக்கிறார், வீதிகளில் இருந்து பாலம்,பாடசாலை, சம்புக்களப்பு, கோணாவத்தை என்று பல முறை உள்ளூராட்சி அதிகாரத்தை வைத்திருப்பவர்களால் தடுக்கப்பட்டாலும் பல முறை அவற்றை மீறி வெற்றி கண்டார்.

உதுமாலெப்பை யின் அமைச்சர் பதவியானாலும்,இன்று அக்கரைப்பற்று அதிகாரமிழந்த வேளையிலும் மொத்தமாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவராக கம்பீரமாக வீற்றிருப்பதும் அக்கரைப்பற்று மக்களின் பெரும்பாண்மை வாக்குகளால் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

ஆனால் உங்களை அன்றிலிருந்து இன்று வரை பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றி வரும் முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் என்ன செய்திருக்கிறது......?

மசூர் சின்னலெப்பை என்கின்ற அட்டாளைச்சேனையின் மகனுக்கு மரணிக்கும் வரை தேசியபட்டியல் கனவு விதைத்து அவரை ஏமற்றியது,

தேசிய பட்டியல் தருவதாக வாக்குறுதி வழங்கி இரண்டு வருடங்கள் தன் நன்பர் சல்மானை திருப்தி யடைய செய்வதற்க்கு அட்டாளைச்சேனை எனும் ஊர் பலியாக்காப்படடிருக்கிறது.
ஏற்கனவே அதாஉல்லாஹ் வின் தேசிய காங்கிரஸ் உங்களின் இரண்டாயிரம் வாக்குகளுக்காக தந்த மாகாண சபை அமைச்சு பதவியை தந்து உங்களை எவ்வளவு தூரம் ஏமாற்றி இருக்கிறார்கள் என எண்ணி பாருங்கள் .

பிரதேச வாதம் மூலம் மக்களை எவ்வளவு காலத்துக்கு ஏமாற்ற முடியும்?
தேசிய பட்டியல் தருவதாக எவ்வளவு காலத்துக்கு ஏமாற்ற முடியும்?
இன்றைய நல்லாட்சி அரசு புரிகின்ற அத்தனை அநியாயங்களுக்கு ஒத்தாசை வழங்கி தனது பதவியை தக்க வைத்து கொள்ள ஹக்கீம் நடாத்தும் நாடகங்கள் இன்னும் புரியாமலா இருக்கிறீர்கள்?

பள்ளிகள் உடைப்பதும், ஞானசாரவை காப்பாற்றுவதும், அரச அந்தஸ்த்து வழங்குவதும், இறக்காமத்தில் சிலை வைப்பதும், மத்திய வங்கியை கொள்ளை அடித்ததும், முஸ்லீம்களின் அரசியல் பிரதிநிதி துவத்தை இல்லாமல் செய்யும் உள்ளூராட்சி சட்ட மூலத்தை இயக்குவதும், முஸ்லீம்களின் கடைகளை எரிப்பதும் என்று அனைத்தும் அரங்கேறி கொண்டிருக்கையில் முஸ்லீம் தலைவர்களின் கையாலாகத தனம் என்ன என்று கோர மாட்டீர்களா?

அதாஉல்லாஹ் வும் உதுமாலெப்பை யும் ஐந்து சதம் வாங்காமல் வழங்கிய அரச தொழில் வாயப்புக்கள் இன்று விலைக்கு விற்க்கப்படுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லையா?

சமுக சீர்கேடுகள் எவ்வாறு மலிந்து கிடக்கிறது என நீங்கள் எண்ணங் கொள்ள வில்லையா?

உங்களை உரிமை எனும் வெற்று கோசத்தால் முட்டாளாக்கி பிரதேசவாதம் எனும் நோயால் திரையிட்டிருக்கிறார்கள்

என் அயலவனே!!
பொய்மை நிரம்பிய காலத்தினுள் சத்தியத்தை அழித்து விட முடியாது, உறுதியாக எழும்பி எம்மை முட்டாள்களாக்கி அதிலே சவாரி செய்யும் அயோக்கியதனத்துக்கு முடிவு கட்டுவோம்
இதுவே எம் இன்றைய தேவை

வஸ்ஸலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -