அமைச்சர் ரிஷாத்தை குறை கூற அஸ்மினுக்கு என்ன தகுதி இருக்கிறது-அமீர் அலி



அனா-

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மீது சேறு பூசுவதற்கு நல்லாட்சி மக்கள் முன்னனிக்கு துரோகம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினுக்கு என்ன அறுகதையுள்ளது என என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பெண் பொருளாதார அபிவிருத்தி மையத்தில் சிறிய ஆடைத் தொழிற்சாலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

வடமாகாண சபையின் நல்லாட்சி மக்கள் முன்னனி ஒரேயொரு தேசிய பட்டியல் உறுப்பினர் அய்யூப் அஸ்மின் முசலி பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணி சம்பந்தமாகவும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சரியாக செய்யவில்லை என்ற காரணத்தினால் பதவி துறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது எதனால் சிரிப்பது என்று எனக்கு தெரியவில்லை.

நல்லாட்சி மக்கள் முன்னனிக்கும் காத்தான்குடியிலுள்ள பொறியியலாளர் அப்துல் றகுமானுக்கு கிடைத்த சொத்துதான் இந்த அய்யூப் அஸ்மின். இரண்டு வருடத்தின் பின் இராஜினாமா செய்து கொள்ள வேண்டும் என்ற சத்தியத்தின் பேரில் தான் அவரை பரிந்துரை செய்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஆசனத்தை பெற்றுக் கொடுத்தனர்.

நல்லாட்சி மக்கள் முன்னனிக்கும், பொறியியலாளர் அப்துல் றகுமானுக்கும் கையை அசைத்து காட்டி விட்டு அதிக பிரசிங்கித் தனம் பேசுகின்ற வலுவலுப்பு மாறாத கன்டுக்குட்டியைப் பற்றி அரசியல் பேசுவதிலே உடன்பாடு கிடையாது.

இந்த நாட்டிலே உள்ள ஜனாபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், முதலமைச்சர்கள் கூட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீச்சலையும், தைரியத்தையும், மன உறுதியையும் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டிலே பௌத்த இனவாதம் தோற்றுவிக்கப்பட்டு வில்பத்து பிரச்சனையை பூதாகரமாக எடுத்த பொழுது வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் எங்கிருந்தார் என்று எனக்கு தெரியாது.

வலுவலுப்பு மாறாத குட்டி அரசியல்வாதி விடயத்தில் நாங்கள் அளட்டிக் கொள்ள தேவையில்லை. நல்லாட்சி மக்கள் முன்னனி கட்சிக்கு துரோகத் தனம் செய்து விட்டு, அவருடைய பகுதியில் தமிழ் அரசியல் தலைவர்களிடத்தில் நல்ல அரசியல்வாதியாக மாற வேண்டு என்பதற்காக காட்டிக் கொடுப்பு செய்கின்ற துரோகியாக இருக்கின்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மீது சேறு பூசுவதற்கு இவருக்கு என்ன தெரியும் என்பதை நான் கேட்டால் முழு இலங்கையுமே சிரிக்கும்.
வலுவலுப்பு மாறாத குட்டி அரசியல்வாதியாக இருந்து கொண்டு அவருடைய கட்சியின் வலுவலைப்பை நாக்கினால் நக்கி எடுக்கும் வரையும் அரசியல் தெரியாமல் இருக்கின்ற அய்யூப் அஸ்மின் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் ஆளுமையை, தைரியத்தை பற்றி தெரியாது.

இந்த நாட்டிலே இமயமலை போல் இருந்த மகிந்த ராஜபக்ஷவை துரத்தி, புறட்டி விட்டு வந்த தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன். எனவே இவருக்கு அய்யூப் அஸ்மின் அரசியல் கலாச்சாரம் சொல்லி கொடுக்க வேண்டிய தேவையில்லை.

எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் அமீரலிக்கு பிறகு உங்கள் பிள்ளை பாராளுமன்றம் செல்ல வேண்டும், ஒரு தைரியமிக்க அரசியல் தலைமை இந்த கல்குடாவிலே இருக்க வேண்டும் என்று எல்லா தாய்மாரும் என்னுடைய பிள்ளையாக இருக்க வேண்டும் என்று கனவு காணுங்கள்.

கல்குடாவிலே இந்த அரசியல் தலைமையை தக்க வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு வீடுகளுக்கும் சொல்லுகின்றோம் என்று சொன்னால் உங்களுடைய பிள்ளைதான் இப்படி வழிகாட்டுவதற்கான தலைமைத்துவத்தை இந்த பிரதேசத்தில் இருந்து கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கடந்த காலத்தில் நிரூபித்துக் காட்டியதன் காரணமாக உங்கள் பிள்ளை எம்மையாள வேண்டுமாக இருந்தால் எமது பிரதேசத்திலுள்ள போதுமான வாக்கு இதற்கு போதுமானது என்றார்.

நாட்டில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் யுவதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஸாட் பதியுதீனின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் சிறிய ஆடை தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் இருபத்திநான்கு தையல் இயந்திரங்களை கொண்டு யுவதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் முப்பத்தி ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் எம்.எப்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான்;, பிறைந்துறைச்சேனை பெண் பொருளாதா அபிவிருத்தி மையத்தின் தலைவி எஸ்.நபீரா, அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.றிஸ்மின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -