ஏ.ஆர். அபி அஹமட்-
மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் ரி.ஏ யின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்று வரும் 'கல்முனை கல்வி மாவட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி' நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை சம்மாந்துறை கமுஃசதுஃமுஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்வி பணியகத்தின் அம்பாரை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எல்.சுபையிர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் , தேசிய பாலர் பாடசாலைகள் அமைப்பின் கொழும்புப் பிராந்திய நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.எல்.குணரட்ன, அதிபர் ஏ.சீ.ஏ.எம்.இஸ்மாயில், முன்னாள் அதிபர் எம்.ஏ.தம்பிக்கண்டு, விரிவுரையாளர்களான ஏ.எல்.லத்தீப், ஏ.எம்.சம்சுதீன், மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர்களான கலாபூசணம்.ஏ.சீ.இஸ்மாலெவ்வை, ஏ.றசூல், பாலர் பாடசாலைக் கல்வி பணியகத்தின் இணைப்பாளர்களான ஆர்.எம்.றியாஸ், அஷ்சேஹ்.ஐ.எல்.எம்.அனீஸ் மௌலவி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'பல்வேறு திறன்களையுடைய கல்விமான்களை உருவாக்குகின்ற உண்ணத பணியின் முதற்படியில் தியாகிகளாகக் காணப்படும் பாலர் பாடசாலை ஆசிரியைகளின் உண்ணத சேவையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களது வாழ்வு வளம் பெறும் வகையான திட்டங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கு நாம் எமது மாகாண சபையின் மூலம் உந்துசக்திகளாகச் செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.