புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட புங்குடுதீவு 12 இல் அமைந்துள்ள "தாயகம் பொது நூலகத்துக்கு" விரும்பியோர் "புத்தகங்கள் அன்பளிப்பு" செய்யலாமென நாம் ஏற்கனவே அறிவித்து இருந்தோம்.
இதன் பிரகாரம், புங்குடுதீவில் அமைந்துள்ள "தாயகம் பொது நூலகத்துக்கு" சுவிஸில் இருந்து விடுமுறைக்காக, இலங்கை சென்று இருந்த திரு. திருமதி சுதா செல்வி குடும்பத்தினர், சிறிதளவு நூல்களை இங்கிருந்து கொண்டு சென்று அன்பளிப்பு செய்து உள்ளனர்.
மேற்படி நூல்களை, புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பின் தலைவியான திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன் அவர்கள் இன்றையதினம் பெற்றுக் கொண்டார்.
"ஏரும், எழுத்தும்.. பாரை உயர்த்தும்"..!!
இவ்வண்ணம்...
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
"தாயகம் சமூக சேவையகம்" புங்குடுதீவு.