ஊடகப்பிரிவு-
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் கொண்டுவந்த தனிநபர் பிரேரணைக்கு அடுத்து தரமுயர்த்துதலில் புறக்கணிக்கப்பட்டிருந்த கிண்ணியா வைத்தியசாலையையும் தரமுயர்த்தும் வைத்தியசாலைகளுக்குள் உள்வாங்குவதாக சுகாதார அமைச்சு தனக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கிழக்குமாகாண சபை தெகியத்தகண்டிய, சம்மாந்துறை சாய்ந்தமருது, மூதூர் ,கிண்ணியா வைத்தியசாலைகளை தரமுயர்துமாறு மத்திய அரசிடம் பரிந்துரை செய்திருந்தது இருந்தபோதும் இரண்டுவாரங்களுக்கு முன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ரகசிய கலந்துரையாடலொன்றில் கிண்ணியா வைத்தியசாலையை தவிர ஏனைய வைத்தியசாலைகளை தரமுயர்த்த தீர்மானிக்கப்பட்டது.
இதன்பின் தரவுகளின் படி ஏனைய வைத்தியசாலைகளை விட அதிக தரத்தை கொண்ட கிண்ணியா வைத்தியசாலை ஏன் தர்முயர்த்தலில் புறக்கணிக்கப்பட்டது, இதில் உள்ள அரசியல் உள்நோக்கங்கள் பற்றி இம்ரான் மகரூப் உட்பட ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்தே கிண்ணியா வைத்தியசாலையையும் தரமுயர்த்த தாம் தீர்மானித்துள்ளதாக இன்று சுகாதார அமைச்சில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபிடம் அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த விடயத்தை கொண்டு சிலர் தவறான முறையில் சமூகத்தை வழிநடத்த முற்படுவதாகவும் இத்தரமுயர்வுக்கு உதவிய சிவில் சமூகம்,வைத்தியசாலை அபிவிருத்தி குழு, அரசியல்வாதிகள் அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தனது நன்றிகளை தெரிவித்தார்.