ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியாவில் தொடர்ந்தும் உலமா சபை நிர்வாகக் குழு ஒரேஅமைப்பினரால் மட்டுமே வழி நடாத்தப்படுவதுடன் கொழும்பில் இருந்து வரும் ஜமியதுல் உலமா சபையே தெரிவு செய்து விட்டுச் செல்கின்றனர். கிண்ணியாவைப் பொருத்த மட்டில் அண்மையில் புதிய நிருவாகத் தெரிவு இடம்பெறவுள்ளதாகவும் இதில் புதிய புத்திஜீவிகள் உள்வாங்கப்படவேண்டுமென்றும் சிறந்த ஜமியதுல் உலமா சபை தேர்வு இடம்பெறவேண்டுமென்றும் எம்மக்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய சபையாக திகழவேண்டுமென்றும் இதனை உருவாக்க மக்களுடைய ஒத்துழைப்பு தேவை என்றும் றியல்ஸ் கிண்ணியன்ஸ் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.றாபி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா மண் தனி முஸ்லீம்களைக் கொண்ட ஒரு ஊராக காணப்படுகின்றது இதில் கிண்ணியாவுக்கான ஜமியதுல் உலமா சபை பலமான சபையாக காணப்படல் வேண்டும் முஸ்லீம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் எனவே சரியான அகீதாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவர்களினால் இது புதிய தலைமைத்துவங்களைக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த சபையாக திகழவேண்டுமென்பதே எமது நோக்கமாகுமென்றும் மேலும் தனது அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கிண்ணியாவில் எமது சகோதரர்களின் காணிகள்,வயல் நிலங்கள்,மேய்ச்சல் நிலங்கள் என பல பிரச்சினைகளை எமது சமூகம் எதிர்நோக்கிவருகின்றதையும் நியாயமான நிரந்தர தீர்வுகள் எட்டப்படாமை எமக்கு கவலையளிக்கிறது.எனவேதான் எதிர்காலத்தில் தனித்துவம் படைத்த ஒரு ஜமியதுல் உலமா சபையின் தெரிவுகள் இடம்பெறவேண்டும் .அது மக்களுக்காக பல முன்னெடுப்புக்களை செய்ய முன்வரவேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும் என மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.