ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சீனாவிற்கு சென்று பல பேச்சுவார்த்தை - அமைச்சர் ஹக்கீம்

அனா-
ல்குடா தொகுதியில் ஆரம்பிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 2020ம் ஆண்டில் இப் பகுதியில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கி வைக்கப்படுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்குடாத் தொகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள குடிநீர் வழங்கல் திட்டம் தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்குடா தொகுதியில் சித்தாண்டி, கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி நீர் வழங்கலுக்கான திட்டம் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்துள்ளது. நான் அமைச்சு பதவி ஏற்றதும் செங்கலடி தொடக்கம் பாசிக்குடா, ஓட்டமாவடி வரை பாரிய நீர் வழங்கல் திட்டம் அமுல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீட்டுக்கு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

சீனா அபிவிருத்தி வங்கியில் நிதி பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒப்பந்தம் இந்த மாத்திற்குள் கைச்சாத்திடப்பட உள்ளது.

இந்த நிதியை பெறுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சீனாவிற்கு சென்று பல பேச்சுவார்த்தை நடாத்திய பின்னரே இந்த கடன் தொகை பெறப்பட்டுள்ளது. இந்த திட்டமானது குடியிருப்பாளர் சுத்தமான குடி நீரை பெறுவதற்கானதாகும். 

2020ம் ஆண்டு பூரணப்படுத்தப்பட்டு கல்குடாத் தொகுதி முழுவதும் குடி நீர் வழங்கி வைக்கப்படுவதுடன், 513 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.

இதன்போது ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் தேசமான்ய எம்.ஏ.சி.நியாஸ்தீன் மற்றும் கல்குடா சூறா சபை உறுப்பினரும், கோறளைப்பற்று மத்தி உதவித் திட்டப் பணிப்பாளருமான எஸ்.ஏ.றியாஸ் ஆகியோரினால் அமைச்சருக்கு குடிநீர் திட்டத்iதை வழங்கியமைக்கு நினைச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -