தொப்புள் கொடியை கூட அகற்றாமல் பிறந்த குழந்தையை கூரியரில் அனுப்பிய கொடூர பெற்றோர்

 பீஜிங் : சீனாவில் பச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடியைக் கூட அகற்றாமல் பார்சல் செய்து பெற்றோரே கூரியரில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள புஷோ நகரை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு நேற்று முன்தினம் வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை அவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, குழந்தையை மாவட்ட குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு அனுப்ப முடிவு செய்த அவர்கள், அதன் தொப்புள் கொடியை கூட அகற்றாமல் பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்துள்ளனர்.

தொடர்ந்து, கூரியர் நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்ட அவர்கள், பார்சல் ஒன்று உள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு வந்த கூரியர் ஊழியர், அந்த பார்சலை வாங்கி சென்றுள்ளார். பார்சலை பிரித்து பார்க்கக்கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதித்தனர் அந்த கொடூர பெற்றோர். பார்சலை வாங்கிச் சென்ற அந்த ஊழியர், சிறிது தூரம் சென்றவுடன், பார்சலில் இருந்து குழந்தையின் அழுகுரல் வருவதை கவனித்துள்ளார்.

சந்தேகத்துடன் பார்சலை பிரித்து பார்த்த ஊழியர், அதில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அவர்கள், குழந்தையை ஆசுவாசப்படுத்தினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -