போதைப்பொருள் விவகாரத்தை திசைதிருப்புவதற்காக துபாய், பஹ்ரேன் என்ற விஷமப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றதா?

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது-

ல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்திக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களினால் வரையப்பட்ட வரை படங்களுக்கு விளக்கம் அழிக்கும் நிகழ்வு கடந்த ஐந்தாம் திகதி நகர அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

தூரநோக்கு கொண்ட இந்த அபிவிருத்தி திட்டமானது, நெருக்கடி நிறைந்த கல்முனை பிரதேசத்தில், எதிர்காலத்தில் அதிகரிக்க கூடிய சனத்தொகை மாற்றத்துக்கு ஈடுகொடுக்ககும் வகையிலும், மற்றும் சர்வதேச தரத்தில் நெடுஞ்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள், வடிகாலமைப்பு போன்றவைகள் இந்த வரைபில் அமைந்துள்ளது.

இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டால் “துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக திகழக்கூடிய வாய்ப்புள்ளதாக” வரைபினை வரைந்த பேராசிரியர்கள் கூறினார்கள். அதனையே அந்த நிகழ்வில் இறுதியாக உரையாற்றிய அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உலகில் வளர்ந்து வருகின்ற வறிய நாடுகள் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும்போது வளர்ச்சி அடைந்த நாடுகளில் காணப்படுகின்ற நவீன முறைமைகளை பின்பற்றுவது ஒரு சாதாரண நடைமுறையாகும்.

இங்கே ஒரு விடயத்தினை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது துபாய், பஹ்ரேன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான நகரமாக திகழக்கூடிய வாய்ப்புள்ளது என்று கூறினார்களே தவிர, துபாய், பஹ்ரேன் போன்ற நாடுகளாக கல்முனையையும், சம்மாந்துரையையும் மாற்றப்போவதாக ஒருபோதும் எவரும் கூறவில்லை.

அங்கு கூறப்பட்ட கருத்துக்கள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களின் முகநூலில் மிகவும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடுத்ததுக்கெல்லாம் தலைவர் ஹக்கீமை விமர்சிப்பதுக்கு என்று ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கின்றது. அதில் சிலர் கூலிக்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும், இன்னும் சிலர் விடயத்தினை விளங்கிக்கொள்ளாமலும் விமர்சிக்கின்றார்கள்.

துபாய், பஹ்ரேன் என்றதும் விமான நிலையத்தினை எங்கு அமைப்பது என்று சிலர் கேட்கின்றார்கள். விமான நிலையம் இந்த நாடுகளில் மட்டும்தான் உள்ளதா? ஏன் அது எமது நாட்டில் இல்லையா ? அல்லது அந்த நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் விமானநிலையம் உள்ளதா?

தலைவர் ஹக்கீம் உட்கட்டமைப்புக்கள், பாதைகள், வடிகாலமைக்கள் பற்றி ஒப்பிட்டு பேசுகையில், இவர்கள் துபாய், பஹ்ரேன் நாடுகளிலுள்ள உயர்ந்த கட்டிடத்தினை பற்றி பேசுகின்றார்கள். அந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான உயர்ந்த கட்டிடங்கள் தனியாருக்கு சொந்தமானவை.

எனவே இவ்வாறான அறிவுக்கு அப்பால்பட்ட விமர்சனங்கள் மூலம் இவர்களது அறிவு எந்தநிலையில் உள்ளது என்று இவர்களே வெளிச்சம்போட்டு காட்டுகின்றார்கள்.

கடந்த 2௦௦7 இல் மகிந்தவின் அரசாங்கத்தில் தபால் தொலை தொடர்பு அமைச்சராக ரவுப் ஹக்கீம் அவர்கள் இருந்தபோது கல்முனையை அபிவிருத்தி செய்வதற்காக திட்டமொன்றினை முன்வைத்திருந்தார். ஆனால் அந்த திட்டத்தினை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மகிந்த பின்பு அதனை புறக்கணித்திருந்தார்.

கல்முனை அபிவிருத்தி செய்யப்பட்டால் அது முஸ்லிம் காங்கிரசுக்கே சாதகம் என்று மகிந்தவின் சகோதரர் அந்தஸ்தில் இருந்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தடுத்ததன் காரணமாகவே அந்த திட்டத்தினை மகிந்த கைவிட்டிருந்தார். அவ்வாறு அபிவிருத்திகளை தடுத்தவர்களே இன்று ஒன்றும் செய்யவில்லை என்று விமர்சிக்கின்றார்கள்.

எனவே உண்மைகள் அவ்வாறு இருக்கும்போது வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்ட விசம பிரச்சாரமானது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், கடந்த வாரங்களில் பாரியளவில் போதைப்பொருள் பிடிபட்டதனால் ஏற்பட்ட அரசியல் சரிவிலிருந்து மக்களது கவனத்தினை திசைதிருப்பும் நோக்கிலும் இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை ஊகிக்க கூடியதாக உள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -