காத்தான்குடி முஹாசபா மீடியா நெட்வொர்க்கின் "அந் நிஸா" பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இலவச ஜனாஸா குளிப்பாட்டல் பயிற்சி நிகழ்வு 26.08.2017 சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேன அஷ் ஷஹீத்A. அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் முஹாசபா மீடியா நெட்வொர்க்கின் "அந் நிஸா" பெண்கள் பிரிவின் தலைவி சகோதரி ஹனீஸா பஹ்த் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் சகோதரி பர்ஸானா அஸ்ஹர் (இஸ்லாஹியா) வளவாளராக கலந்துகொண்டதுடன் பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சகோதரி சல்மா அமீர் ஹம்ஸா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் கலந்துகொண்டு பயண்பெற்றதுடன் திருப்தியை தெறிவித்தனர்.
எதிர்வரும் காலங்களில் அனைத்து முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறான நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என முஹாசபா மீடியா நெட்வொர்க்கின் பணிப்பாளர் ஊடகவியலாளர் ஜுனைட்.எம்.பஹ்த் தெறிவித்தார்.