வித்தியா கொலை - சுவிஸ் குமார் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சியான செய்தி

புங்குடுதீவைச் சேர்ந்த மாணவியான சிவலோகநாதன் வித்தியா வன்புணர்வு செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. 

சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகளை பயன்படுத்தி ஆபாச காணொளி தயாரித்துள்ளார். சுமார் 5 காணொளிகள் அவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக யாழ். பாதுகாப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாவை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்து அதனை காணொளியாக்கி சர்வதேசத்துக்கு விற்பனை செய்ய சுவிஸ் குமார் திட்டம் தீட்டியிருந்தமை தொடர்பில், வழக்கு விசாரணைகளின் போது சாட்சிகளின் ஊடாக தகவல் வெளியானது.

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் மற்றும் ஏனைய பிரதிவாதிகள், இதற்கு முன்னர் ஆபாச காணொளிகளை பதிவு செய்து விற்பனை செய்துள்ளதாக யாழ். பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து இவ்வாறான ஆபாச காணொளிகளை தயாரித்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, 18 வயதான சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பில் 9 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக கடத்தல், கொலை, கூட்டு பாலியல் வன்முறை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு, மூவரடங்கிய விசாரணை மன்று அடிப்படையில் யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -