அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின்கீழ் மான்புமிகு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க கிழக்குமாகாண பிரதம செயலாளரின் பணிப்புரைக்கமைவாக கிழக்குமாகாண கல்வித்திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், உள்ளூராட்சி மன்றம் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
கடந்த ஜ}லை 28,29,30ம் திகதிகளில் சகல கிழக்கு மாகாணத்தில் உள்ள 1200 பாடசாலைகளிலும் இச் சுத்திகரிப்பு நிகழ்வு இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று (01.08.2017) கிழக்கு மாகாணத்தில் 1856 உள்ள சகல பாலர் பாடசாலைகளிலும் தொடர் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு அதிபர்கள்;, ஆசிரியரகள்;, மாணவர்கள்;, பழைய மாணவர்கள், முப்படையினர்கள், சுகாதார பரிசோதகர்கள், பெற்றோர் கலந்து சிறப்பித்தனர்.
யுனிசெப் நிறுவனம் இதற்கான நிதி அனுசரனையை வழங்குகின்றது அத்துடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நடைமுறைப்படுத்தி வருகின்;றமை குறிப்பிடத்தக்கது.