காத்தான்குடி ஸாவியா பள்ளிவாயல் ஜமாஅத்தார்களிடம் கையளிப்பு..!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டிலும்,காத்தான்குடி-01 மீரா ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஸாவியா பள்ளிவாயல் மஹல்லாவாசிகளினதும் நிதிப் பங்களிப்புடன் அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட ஸாவியா பள்ளிவாயலை ஜமாஅத்தார்களிடம் கையளிக்கும் நிகழ்வு 13-08-2017 நேற்று ஞாயிற்றுக்கிழமை சுபஹ் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

காத்தான்குடி-01 மீரா ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம்.சீ.எம். சுபைர் சிசி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஸாவியா பள்ளிவாயலை திறந்து வைத்து ஜமாஅத்தார்களிடம் கையளித்தார்.

இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சேவையைப் பாராட்டி ஸாவியா பள்ளிவாயல் நிர்வாகத்தினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர்,முன்னாள் காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன்; (பலாஹி) ,காத்தான்குடி தள வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் உட்பட பள்ளிவாயல் மஹல்லாவாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -