ஆசிரிய நியமனங்களுக்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் உதுமாலெப்பை கோரிக்கை..!

எம்.ஜே.எம்.சஜீத்-
டைநிறுத்தப்பட்ட இழுக்குச் சேனை வாங்காமம், நியுகுன கிராமங்களின் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்குமாறும், அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்திற்கான புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்குமாறும், கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதால் இவ்வெற்றிடங்களுக்கான ஆசிரிய நியமனங்களுக்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கிழக்கு மாகாண அளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு.

கிழக்கு மாகாண சபையினால் சமமான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் இறக்காம பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இழுக்குச்சேனை – வாங்காமம் , நியுகுன கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பால் சேகரிக்கும் நிலையங்களும் , இக்கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் கால்நடைகள் வழங்குவதற்குமாக 60 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு 37 பயனாளிகளுக்கு கால்நடைகள் வழங்கப்பட்ட நிலையில் அரசியல் காரணங்களுக்காக இவ் ஏழை மக்களின் நன்மைக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை வேறு இடங்களுக்கு மாற்றி இத்திட்டத்தினை இடைநிறுத்தப்பட்டதாகவும் சுனாமியினால் முழுமையாக சேதமடைந்த அட்டாளைச்சேனை அல்அர்ஹம் வித்தியாலயத்திற்கான புதிய காணியினை கொள்வனவு செய்வதற்காக கடந்த 03 ஆண்டு காலம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இட நெருக்கடியினை எதிர்நோக்குவதனால் இப்பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இப்பாடசாiயின் நன்மை கருதி இக்காணி கொள்வனவுக்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதால் இவ்வெற்றிடங்களுக்கான ஆசிரிய நியமனங்களுக்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கிழக்கு மாகாண அளுநர் ரோகித்த போகல்லாகமவை அவரது கொழும்பு காரியாலத்தில் அன்மையில் சந்தித்த கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் இனைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இக் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவரிடம் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் இந்த விடயங்கள் தொடர்பில் இன்று ஆளுநர் அவர்களின் திருகோணமலை காரியாலயத்தில் ஆளுநர் அவர்களின் தலைமையில் ,கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பங்குபற்றுதலுடன் , அளுநரின் செயலாளர் திருமதி.முரளிதரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்த்தன, கிழக்கு மாகாண திட்டமிடல் பிரிவுக்கான பிரதி பிரதம செயலாளர் திரு.மகேந்திர ராஜா, கிழக்கு மாகாண நிதிப்பிரிவுக்குரிய பிரதி பிரதம செயலாளர் , கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிசாம், கிழக்கு மாகாண கால்நடைத்திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் பாஸில், அல் அர்ஹம் வித்தியாலய அதிபர் ஏ.எம்.இத்ரீஸ்; மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்ட விசே கூட்டத்தில் இடைநிறுத்தப்பட்ட இழுக்குச் சேனை வாங்காமம், நியுகுன கிராமங்களின் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்குமாறும், அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்திற்கான புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்குமாறும், கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் தொடர்பாக நிலவுகின்ற வெற்றிடத்தை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -