க.கிஷாந்தன்-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் வனராஜா பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 06.08.2017 அன்று மாலை 3.45 மணியளவில் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 02 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கரவண்டி மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியிலிருந்து அட்டன் நகரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த லொறியுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். விபத்தில் முச்சக்கரவண்டியும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.