''ஸ்ரமிக சுரெகும'' வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்களின் பிள்ளைகள் அவர்கள் குடும்ப அங்கத்தவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகமும் ஒன்றிணைந்து மாண்புமிகு அமைச்சர் தலதா அதுகோரல அவர்களினதும் மாண்புமிகு பிரதிஅமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களினதும் பங்குபற்றுதலுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 27.08.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
இதன் போது இப்பிரதேச பொதுமக்கள் இது தொடர்பில் தங்களது பிரச்சினைகளை முன்வைத்து பயனடைய முடியும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.