நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைத்து மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி காட்டுவோம்..!

க.கிஷாந்தன்-
ந்த நாட்டில் எதிர்வரும் தேர்தல் எதுவாக இருந்தாலும் சரி அந்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பானவர்கள் என்பதை எடுத்துக்காட்டி இந்த தேர்தலை வெற்றிக் கொண்டு இந்த இலங்கையில் அரசமைக்க மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி காட்டுவோம் என முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

நாட்டின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் புது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று கினிகத்தேனை பிடாஸ் விடுதியில் 05.08.2017 அன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, காமினி லொகுகே, சீ.பீ.ரத்நாயக்க மற்றும் கட்சியின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கி நல்லாட்சி எனும் பேரில் அரசாங்கத்தை முன்னெடுத்து செல்கின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாட்டவருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளனர். இந்த துறைமுகத்தின் ஊடாக இந்த நாட்டின் அரசாங்கம் பிரயோசனத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர்.

அம்பாந்தோட்டை அபிவிருத்தியின் ஊடாக பாரிய பொருளாதார நெருக்கடிகளை இல்லாதொழிக்கலாம். ஆனால் இந்த துறைமுகத்தை வெளிநாட்டவருக்கு கொடுப்பதனால் இதில் கிடைக்கும் இலாபத்தினை நாட்டின் தலைவர்கள் சிலர் தனது சட்டை பையிக்குள் நுழைக்கும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்த்து கேட்டால் எம்மை சரியில்லை என்று இன்றும் எமக்கு எதிராக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர். இந்த நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் வெறுத்து வருகின்றனர். எதிர்வரும் காலத்தில் இந்த நாட்டில் உள்ளுராட்சி மன்ற சபைகளின் தேர்தல்ளை நடத்த போவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் கேட்டளவிலான செயற்பாடுகளை இவர்களிடம் காணப்படுகின்றது. இவர்களின் தேர்தல் முறையானது பழைய ஆடை தொழிற்சாலை போல் அமைகின்றது.

ஆனால் எதிர்வரும் காலத்தில் எந்த தேர்தலை நடத்தினாலும் அந்த தேர்தலில் இவ் அரசாங்கத்திற்கு எதிரான அணைவரையும் ஒன்றிணைத்து தேர்தல் வெற்றியை அடைவோம். அதேபோன்று தேர்தலில் வெற்றியீட்டி இந்த நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைத்து மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி காட்டுவோம் என மஹிந்தானந்த அலுத்கமகே சூளுரை விடுத்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -