யாழ்ப்பாணத்தில் புதுப்பிக்கப்பட் பாடசாலையை திறந்து வைத்த அமெரிக்க பிரதி தூதுவர்..!

கொழும்பு, ஆகஸ்ட் 4: 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் திறந்து வைத்தார். இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டடமானது கல்லூரி மாணவிகளின் நல்லிணக்கம் மற்றும் நிலைபேற்றிற்கு உதவுவதுடன், நவ Pன வசதியில் கற்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கும். 

இலங்கை கல்வி அமைச்சு மற்றும் வட மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்புடன், சுமார் 180 மாணவர்களுக்கு கட்டட வசதியைத்தரும் மூன்று மாடி கட்டடத்தினை 91 மில்லியன் இலங்கை ரூபாயினை அமெரிக்க அரசாங்கம ; செலவிட்டுள்ளது. 

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கல்லூரி அதிபர் திருமிகு எம் விமலநாதன் ஆகியோருடன் இணைந்து பிரதித் தூதுவர் ஹில்டன் மங்கள விளக்கேற்றல் மற்றும் கட்டட திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
'
இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்களை கற்பிப்பதிலும் பார்க்க சிறந்த முதலீடும், உயர்தெரிவும் இருக்காது என்று நான் நம்புகின்றேன்.' என நிகழ்வில் கலந்து கொண்ட பிரதித் தூதுவர் ஹில்டன் தெரிவித்தார். 

'அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவு அன்றாடம் ஆழமாகி வருகின்றது. எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கான மற்றொரு வெளிப்பாடாக இது உள்ளது' என அவர் குறிப்பிட்டார். மாகாண கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் அமெரிக்க பசுபிக் கட்டளைப் பிரிவினால் (PACOM) இந்து மகளிர் கல்லூரி தெரிவு செய்யப்பட்டது. (PACOM) இனால் முகாமை செய்யப்பட்ட இந்த நான்கு வருட செயற்றிட்ட நிர்மாணத்தில், U.S. Army Corps of Engineers, Magbool Engineering Consultants மற்றும் Salasi Lanka Engineering ஆகியோர் பங்காளராக கலந்து கொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -