கோப்பாய் ஆசிரிய கலாசாலை பதிவுகள் ஆரம்பம்..!

பாறுக் ஷிஹான்-
கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லையில் ஈராண்டு பயிற்­சியை மேற்­கொள்­வ­தற்­காக 2017/2018 கல்­வி­யாண்­டிற்­கான ஆசி­ரிய மாண­வர்­களின் பெயர் விப­ரங்கள் கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லைக்கு கிடைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த வகையில் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பதி­வுகள் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 6 ஆம் திகதி புதன்­கி­ழமை ஆரம்­ப­மாக உள்­ளன என்றும் அனை­வ­ரையும் அன்­றைய தினம் தங்கள் பதி­வு­களை மேற்­கொண்டு தொடர்ந்து பயிற்­சியில் ஈடு­ப­டும்­படி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லைக்குத் தெரிவு செய்­யப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கான அனு­ம­திக்­க­டிதம் தபா­லி­டப்­பட்­டுள்­ள­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் பாட­சாலை விடுகை அனு­ம­தி­யோடு கலா­சா­லைக்கு வருகை தரு­மாறு கோப்பாய் ஆசி­ரிய கலா­சாலை அதிபர் வீ.கரு­ண­லிங்கம் அறி­வித்­துள்ளார். ஆரம்பக் கல்வி, சங்­கீதம், இந்து சமயம், கணிதம், விவ­சாயம், வர்த்­தகம், விசேட கல்வி, மனைப்­பொ­ரு­ளியல் ஆகிய பாட­நெ­றி­க­ளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆசிரிய மாணவர்களே அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -