இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் நாடாளவிய ரீதியில் இஜ்திமாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடரில் அண்மையில் (07-08-2017) கஹட்டகஸ்த்திகிலிய ஜுமுஆப் பள்ளிவாசலில் ஆண்களுக்கும் கஹட்டகஸ்த்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பெண்களுக்கும் வெவ்வேறாக நடைபெற்றது.
'மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திடுவோம்' எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், உதவித் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி) மற்றும் அஷ்ஷைக் ஸியால்தீன் (மதனி) ஆகியோர் உரை நிகழ்த்துவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
ஜெம்சித் அசீஸ்-