வாழைச்சேனை தொடக்கம் ஓட்டமாவடி வரை குடிநீர் வேலைத்திட்டம்..!

வாழைச்சேனை தொடக்கம் ஓட்டமாவடி வரையான 54 கிலோ மீற்றர் தூரத்திற்கு உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன, கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த குடிநீர்த்திட்டத்திற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கல்குடா தொகுதி அமைப்பாளர் ரியால் உட்பட பலர் இது தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் இது தொடர்பில் வேண்டுகோள்களை விடுத்திருந்தமை குறிப்பிடததக்கது. பல ஆயிரம் ரூபா பெறுமதியான இந்த குடிநீர்த்திட்டம் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஏறாவூருக்கான ஜனாதிபதியின் விஜயத்தின் போது கிரான் தொடக்கம் ஓட்டமாவடி வாழைச்சேனை வரையான குடிநீர்த்திட்டமொன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -