சகோதரர் இக்பால் அவர்களே! உங்களது பதிலைத் தாருங்கள்!..



கோ.இக்பால்! நீங்களும் மக்களின் ஆதங்கங்களை அறியாமல் பதிவிட்டிருப்பது கவலை அளிக்கின்றது. அட்டாளையின் வரலாறு 30வருட அர்ப்பணிப்பு, தியாகங்களைக் கொண்டது. இருந்தும், பொத்துவில் தொட்டு புல்மோட்டை வரையும் முகாவினால் வழங்கப்பட்ட அந்த அதிகாரம் ஏன் இம்மக்களுக்கு தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது? அதனால் மக்களும், அட்டாளை.பிரதேச மக்களும் அடைந்துள்ள ஆதங்கமும் விரக்தியும் உங்களுக்கு விளங்குமா?...

களியோடைக்கு அப்பால் தொடர்ந்தும் வாக்களித்து பொத்துவில் வரையும் கைவிடப்பட்டுள்ள சுமார் 65ஆயிரம் மக்களுக்கு தேவைகளும் அபிலாசைகளுமில்லையா?....அவர்களின் பிள்ளைகளும் சந்ததிகளும் அரசியல் அநாதைகளா?... .

அட்டாளைச்சேனை என்பது ஏமாளிகளையும், முட்டாள்களையும் கொண்ட பிரதேசமா?... தொடர்ந்தும் மாவட்டத்தின் பெரிய ஊர்கள் தொகுதிகளின் மேய்ச்சல் தரையாகத்தான் இப்பிரதேச மக்களிருந்து தொடாந்தும் கோம்பை சுமக்கத்தான் வேண்டுமா?... 

கடந்த 2015 தேர்தலில் இப்பிரதேச மக்களின் தொடர்ந்த தியாகம், அர்பணிப்பு என்பவற்றால்தான் சம்மாந்துறையின் மானம் மரியாதையும், முகாவின் தேசிய மட்டத்திலான பேரம் பேசலும் பாதுகாக்கப் பட்டது என்பதை நீங்களுமா புரியவில்லை?... இம்மக்கள் அவர்களின் உச்ச பண்பாட்டினால் பொறுமை காப்பது அம்மக்களின் இயலாமையா?....

இன்று அம்மக்களின் மன உளைச்சல்களை புரிந்து கொண்டு மயிலும் குதிரையும் இக்கோட்டையை உடைப்பதற்கு செய்யும் முஸ்தீபுகளை நீங்கள் அறியவில்லையா?... எம்பியால் செய்ய முடியுமா? இல்லையா? என்பது அப்பதவியை வகிப்பவரைப் பொறுத்தது? மாகாண சேவையென்பது அப்பதவிக்குரிய சேவை இலக்கணங்களில்லையா?... 

எமது ஊர்மக்களின் நிதிமூலம் 13அடி ஆஸ்பத்திரிக்கான வீதியை அகட்டியது, சரித்திரம் காணாத அபிவிருத்தி மழையா?.... நாங்களும் முகா போராளிதான் அதற்காக எல்லாத்தையும் நியாயமாக்கி, குருட்டு வாதமிட வராதீர்கள்?.... 

அட்டாளைச்சேனையின் எம்பி தாமதமடையும் ஒவ்வொரு கணமும் முகாவின் சரிவை யாரும் தடுக்க முடியாது?...என்ற யதார்த்தத்தை நீங்கள் புரியவில்லையா?.... 27ம்தேதியின் கூட்டம் முகா போராளிகளை விட மற்றவர்களால் ஐதாகி இருந்ததை நீங்கள் காணவில்லையா?... 

இம்மண்ணில் நாம் இதுவரையும் கட்டிக்காத்த முகா இன்று அழிந்து போவதை நீங்கள் பொறுப்பீர்களா?.... அட்டாளைச்சேனையின் 30வருடகால அர்ப்பணிப்பு,தியாக போராட்டம்.?... 

அம்மக்களுக்கு காலா காலம் கொடுக்கப்பட்டு, அப்பட்டமாக மீறப்பட்டு வரும் தலைமைத்துவ வாக்குறுதிகள் வெறும் பம்மாத்தும், பெறுமதியற்ற வாய்ச்சாடல்களா?.... 

இரண்டுவருடங்களையும் தாண்டிச்செல்லும் "தற்காலிக எம்பி" என்பதன் வியாக்கியானம் என்ன?..... ஆகவே நீதி நியாயங்களோடு பேசுங்கள். உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஆனால் எமது மண்ணிலே பிறந்து இம்ண்ணுக்கே "பெற்ற தாய்க்கும் பிறந்த மண்ணுக்கும் துரோகிகளாக மாறியிருக்கும் எட்டப்பர்களை அட்டாளை மக்கள் முதலில் இனம் காண தொடங்கியுள்ளர்கள். இன்ஷா அல்லாஹ்! மிக விரைவில் நீங்கள் இதைப்புரிவீர்கள். ஆனால் மேற்கூறிய வினாக்களுக்கு உங்கள் பதிவைத் தாருங்கள். நன்றி!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -